அனைத்து ஐபிஎல் ஆட்டங்களிலும் பஞ்​சாப் கிங்ஸ் வீரர் ஹர்ப்ரீத் விளையாட வேண்​டும்: சஞ்சய் பங்கார் வலியுறுத்தல்

அனைத்து ஐபிஎல் ஆட்டங்களிலும் பஞ்​சாப் கிங்ஸ் வீரர் ஹர்ப்ரீத் விளையாட வேண்​டும்: சஞ்சய் பங்கார் வலியுறுத்தல்
Updated on
1 min read

மும்பை: இந்த மாதம் தொடங்​க​வுள்ள அனைத்து ஐபிஎல் ஆட்​டங்​களி​லும் பஞ்​சாப் கிங்ஸ் வீரர் ஹர்ப்ரீத் பிரார் விளை​யாட வேண்​டும் என்று இந்​திய கிரிக்​கெட் அணியின் முன்​னாள் வீரர் சஞ்​சய் பங்​கார் வலி​யுறுத்​தி உள்ளார். 2026-ம் ஆண்​டுக்​கான ஐபிஎல் கிரிக்​கெட் வரும் 28-ம் தேதி முதல் 2 மாதங்​களுக்கு நடை​பெறவுள்​ளது.

போட்​டிக்​காக 10 அணி​களும் சிறப்​பான முறை​யில் தயாராகி வரு​கின்​றன. வரும் 31-ம் தேதி நியூ சண்​டிகரில் நடை​பெறவுள்ள தனது முதல் போட்​டி​யில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை எதிர்த்து பஞ்​சாப் கிங்ஸ் விளையாடவுள்ளது.

இந்​நிலை​யில் ஜியோ ஹாட்​ஸ்​டாருக்கு சஞ்​சய் பங்​கார் அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது: பஞ்​சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணி​யில் இடம்​பெற்​றுள்ள சுழற்​பந்து வீச்சாளர் ஹர்​பிரீத் பிரார் மிகச் சிறந்த வீரர்​களுள் ஒரு​வர். அவர் இடதுகை, வலதுகை பேட்​ஸ்​மேன் என அனைத்து வீரர்​களுக்​கும் ஏற்ற வகை​யில் பந்​து​வீசி அவர்​களை நிலைகுலை​யச் செய்​யும் திறமை படைத்​தவர். அசாத்தியமான சுழற்​பந்து வீச்சாளர்.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் பஞ்​சாப் அணிக்​காக ஹர்​பிரீத் பிரார் விளை​யாடி வரு​கிறார். அவர் 31.00 சராசரி​யில் 49 போட்டிகளில் விளை​யாடி 35 விக்​கெட்​களைக் கைப்பற்றியுள்​ளார். கடந்த ஐபிஎல் சீசனில் 8 ஆட்டங்களில் பங்​கேற்று 10 விக்​கெட்​களைச் சாய்த்​தார். இதில் அவரது சிறந்த பந்​து​வீச்சு 3/22-ஆக இருந்​தது. கடந்த சீசனில் பஞ்​சாப் அணிக்​காக கிளென் மேக்​ஸ்​வெல் இருந்தார். இந்த ஆண்டு அவரது இடத்தை ஹர்​பிரீத் பிரார் நிரப்​பு​வார்.

பவர்​பிளே ஓவர்​களில் அவரை அணி நிர்​வாகம் பயன்​படுத்திக் கொள்​ளலாம். வரும் சீசனில் அனைத்து ஆட்டங்களி​லும் ஹர்​பிரீத் பிராரை விளை​யாட வைக்க பஞ்​சாப் கிங்ஸ் நிர்​வாகம் ஏற்​பாடு செய்​ய​வேண்​டும். பஞ்சாப் அணி​யில் யுவேந்​திர சாஹல் இருந்​தா​லும், சாஹலை நடு ஓவர்​களில் பயன்​படுத்​தலாம். பவர்​பிளே ஓவர்​களில் ஹர்​பிரீத் பிராரை பயன்​படுத்​தும்​போது அது அணிக்கு நல்ல பலனைத் தரும்.

அவருடைய திறமை மீது எனக்கு மிகுந்த நம்​பிக்கை இருக்கிறது. அவர் ஆர்​சிபி அணிக்கு எதி​ராக விளையாடிய​போது நான் அதைப் பார்த்​திருக்​கிறேன். ஹர்பிரீத் பிராரை ஒரு தாக்​கத்தை ஏற்​படுத்​தும் வீர​ராக (இம்​பாக்ட் பிளேயர்) களமிறக்க வேண்​டும். அவரை ஒவ்​வொரு போட்​டி​யிலும் விளை​யாட வைக்க வேண்​டும் என்​பது​தான் எனது கோரிக்கை. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அனைத்து ஐபிஎல் ஆட்டங்களிலும் பஞ்​சாப் கிங்ஸ் வீரர் ஹர்ப்ரீத் விளையாட வேண்​டும்: சஞ்சய் பங்கார் வலியுறுத்தல்
பற்றி எரியும் போரும், தகிக்காத தங்கமும்! - பின்னணி என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in