சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்தும் ஆண் குழந்தையை விரும்புவது மிகவும் துரதிருஷ்டவசமானது: மும்பை உயர் நீதிமன்றம் வேதனை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்தும் ஆண் குழந்தையை விரும்புவது மிகவும் துரதிருஷ்டவசமானது: மும்பை உயர் நீதிமன்றம் வேதனை
Updated on
1 min read

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம், கட்​சிரோலி மாவட்​டத்​தைச் சேர்ந்த கோபி​நாத் ஜான்கு பிர​தான் என்​பவர் தனது மகனுக்கு 2-வது பெண் குழந்தை பிறந்​த​தால், அக்​குழந்​தையை குளியல் தொட்​டி​யில் மூழ்​கடித்து கொலை செய்​துள்​ளார்.

ஆனால், இந்த கொலைக் குற்​றத்தை அக்​குடும்​பத்​தினர் மூடி மறைத்​ததோடு, நள்​ளிர​வில் திறந்​திருந்த வாசல் வழியே ஒரு விலங்கு உள்ளே நுழைந்து குழந்​தையைத் தூக்​கிச் சென்​ற​போது அக்​குழந்தை உயி​ரிழந்து விட்​ட​தாக ஒரு நாடகத்தை அரங்​கேற்​றி, அவசர அவசர​மாக இறு​திச் சடங்கு செய்​துள்​ளனர்.

ஆனால், குழந்தை மரணம் குறித்து ஆஷா பணி​யாளர் ஒரு​வரின் புகாரின் அடிப்​படை​யில் வழக்கு பதிவு செய்த காவல் துறை, அக்​குழந்​தை​யின் உடலை தோண்டி எடுத்து உடற்​கூறாய்வு செய்​த​போது நீரில் மூழ்​கடித்து கொலை செய்​யப்​பட்​டது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட கோபி​நாத் ஜான்கு பிர​தான் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், அவரின் ஜாமீன் மனு, கீழமை நீதி​மன்​றத்​தில் நிராகரிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, தனக்கு ஜாமீன் கோரி மும்பை உயர் நீதி​மன்​றத்​தின் நாக்​பூர் கிளை​யில் மேல்​முறை​யீடு செய்​தார்.

அந்த மனு நீதிபதி எம்​.எம். நெர்​லிகர் முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, பாலினப் பாகு​பாடு குறித்து ஆழ்ந்த வருத்​தத்தை நீதிபதி வெளிப்​படுத்​தி​னார். “நமது நாடு சுதந்​திரம் அடைந்து 75 ஆண்​டு​கள் கடந்த பின்​னரும், நம் நாட்​டில் மக்​கள் இன்​னும் ஆண் குழந்​தையையே அதி​கம் விரும்​புவது மிக​வும் துர​திருஷ்ட​வச​மானது. குறிப்​பாக, முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலை​யில், இரண்​டாவதும் மகள் பிறந்​ததை விரும்​பாத​தால், அந்​தக் குழந்தை கொலை செய்​யப்​பட்​டுள்​ளது. இது மக்​கள் இன்​னும் ஆண் குழந்​தையை அதி​கம் விரும்​பு​கின்​றனர் என்​ப​தற்​கான உதா​ரண​மாகும்” என்று வேதனை​யுடன் நீதிபதி குறிப்​பிட்​டார்.

இதையடுத்​து, இக்​கொலை​யில் கோபி​நாத் ஜான்கு பிர​தானுக்கு நேரடித் தொடர்பு இருப்​ப​தாக குறிப்​பிட்​டு, ஜாமீன் கோரிய மனுவை நீதிப​தி தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டார்​.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்தும் ஆண் குழந்தையை விரும்புவது மிகவும் துரதிருஷ்டவசமானது: மும்பை உயர் நீதிமன்றம் வேதனை
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு போட்டி கோலாகல ஆரம்பம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in