சிங்க்பீல்டு கோப்பை செஸ் தொடர்: முதல் சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா

சிங்க்பீல்டு கோப்பை செஸ் தொடர்: முதல் சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா
Updated on
1 min read

செயின்ட் லூயிஸ்: கி​ராண்ட் செஸ் டூரின் கடைசி தொட​ரான சிங்க்​பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்​கா​வின் செயினிட் லூயிஸ் கிளப்​பில் நேற்று தொடங்​கியது.

9 சுற்​றுகள் கொண்ட கிளாசிக் போட்​டி​யான இதில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா தனது முதல் சுற்​றில் அமெரிக்​கா​வின் சாமுவேல் செவியனை எதிர்த்து விளை​யாடி​னார்.

பிரக்​ஞானந்​தாவுக்கு சுமா​ரான தொடக்​க​மாக அமைந்​தது. கருப்​புக் காய்​களு​டன் விளை​யாடிய அவர், செவியனுக்கு எந்​தவொரு வாய்ப்​பை​யும் விட்​டுக்​கொடுக்​க​வில்​லை.

அதேவேளை​யில் செவியனும் ஆட்​டத்தை அதிக சிக்​கலாக்க விரும்​பாமல் காய்​களை நகர்த்​தி​னார். 11-வது நகர்த்​தலுக்​குள்​ளேயே ஒரு ஜோடி யானை​கள் கைமாறின.

அதன் பிறகு இரு​வரும் ராணி மற்​றும் சிறிய காய்​கள் மட்​டுமே கொண்டு இறுதி ஆட்ட நிலையை எட்​டும் வரை காய்​களின் பரி​மாற்​றம் தொடர்ந்​தது.

இரு வீரர்​களிட​மும் தலா இரண்டு குதிரைகள் மட்​டுமே எஞ்​சி​யிருந்த நிலை​யில், 48-வது நகர்த்​தலின் போது ஆட்டம் டிரா​வில் முடிவடைந்​தது. இதனால் இரு​வருக்​கும் தலா 0.5 புள்​ளி​ வழங்​கப்​பட்​டது.

அமெரிக்​கா​வின் ஃபேபி​யானோ கருனா தனது முதல் சுற்​றில் நெதர்​லாந்​தின் ஜோர்​டென் வான் ஃபாரஸ்​டுடன் மோதி​னார். இதில் ஃபேபி​யானோ கருனா 55-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார்.

உஸ்​பெகிஸ்​தானின் ஜவோகிர் சிந்​தரோவ் - அமெரிக்​கா​வின் லெவோன் அரோனியன், ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமர் - அமெரிக்​கா​வின் வெஸ்ஸி சோ, நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி - பிரான்​ஸின் மேக்​ஸிம் வாச்​சி​யர் லாக்​ரேவ் ஆகியோர் மோதிய ஆட்​டங்​கள்​ டிரா​வில்​ முடிவடைந்​தன.

சிங்க்பீல்டு கோப்பை செஸ் தொடர்: முதல் சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா
ஆக.20-ல் காங்கிரஸ் பொதுக்குழு: மாணிக்கம் தாகூர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in