ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பிரதோஷ் சதம் விளாசல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பிரதோஷ் சதம் விளாசல்
Updated on: 
1 min read

சண்டிகர்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழ்​நாடு - சண்டிகர் இடை​யி​லான போட்டி சண்​டிகரில் உள்ள செக்​டார் 16 மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்று பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 86 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 320 ரன்​கள் குவித்​தது.

தனது 10-வது சதத்தை விளாசிய பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 215 பந்​துகளில், 12 பவுண்​டரி​களு​டன் 138 ரன்​களும், குருசாமி அஜிதேஷ் 34 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். முன்​னதாக நாராயண் ஜெகதீசன் 52, பாபா இந்​திரஜித் 51 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழந்​தனர். விமல் குமார் 11, ஆந்த்ரே சித்​தார்த் 13 ரன்​களில் நடையை கட்​டினர்.

சண்​டிகர் அணி தரப்​பில் பாக்​மெண்​டர் லாத்​தர் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினார். நிகில் சர்மா, நிஷுங்க் பிர்லா ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பிரதோஷ் சதம் விளாசல்
“யார் அந்த 3 கோடி ஊடுருவல்காரர்கள்?” - நிதின் நவீனுக்கு ப.சிதம்பரம் கேள்வி

X