பொலார்டுக்கு 15 சதவீதம் அபராதம்

பொலார்டுக்கு 15 சதவீதம் அபராதம்
Updated on
1 min read

தரம்சாலா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் இரவு தரம்சாலாவில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் - மும்பை இந்​தி​யன்ஸ் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் மும்பை அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்த போட்டியின் 2-வது இன்​னிங்​ஸில் 19-வது ஓவரின் போது மும்பை அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ரான கெய்​ரன் பொலார்டு, 4-வது நடு​வரிடம் வாக்​கு​வாதம் செய்​தார்.

அப்​போது அவர், அவதூறான வார்த்​தைகளை பயன்​படுத்​தி​னார். இதையடுத்து ஐபிஎல் நடத்தை விதி​களின்​படி கெய்​ரன் பொல்லார்​டுக்கு அவரது போட்டி ஊதி​யத்​தில் 15 சதவீதம் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன் ஒரு தகு​தி​யிழப்பு புள்ளியும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

பொலார்டுக்கு 15 சதவீதம் அபராதம்
நாம் கடின காலத்துக்கு தயாராக வேண்டுமா? - எரிபொருள் விலை உயர்வும் தாக்கமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in