2 நாளில் முடிந்த பெர்த் டெஸ்ட்: தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகச் சென்ற ஏகப்பட்ட உணவு!

பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியம்

பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியம்

Updated on
1 min read

பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்கள் பரபரப்பான, விறுவிறுப்பான ஆட்டத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் அதிரடி வெற்றியில் முடிந்தது. இதனையடுத்து ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு நட்டம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பு, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு இழப்பு, ரசிகர்களுக்கும் இழப்புதான். ஆனால் 3ம் நாளுக்காகத் தயாரிக்கப்பட்ட உணவுகள் தான தர்மத்திற்கு கொடுக்கப்பட்ட வகையில் 2 நாள் டெஸ்ட் வரப்பிரசாதமே என்கின்றனர் அங்குள்ள சமூக ஆர்வலர்கள்.

3ம் நாளிலும் நல்ல கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபரிமிதமான கூட்டத்தினருக்காக திட்டமிடப்பட்டிருந்த, ஆனால் இரண்டு நாட்களுக்குள் ஆட்டம் முடிவடைந்ததால் பயன்படுத்தப்படாத ஒரு பெரிய அளவிலான உபரி உணவு, மேற்கு ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள அனைத்து உணவையும் ஆஸ்திரேலியாவின் முன்னணி உணவு மீட்பு சேவையான OZHarvest-க்கு அனுப்பியது, இது SecondBite மற்றும் Foodbank WA உடன் இணைந்து மாநிலம் முழுவதும் தேவைப்படுபவர்களுக்கு உணவை தானமாக விநியோகித்தது. மேற்கு ஆஸ்திரேலியாவிலேயே இதுவரை இவ்வளவு உணவு நன்கொடையாக நாங்கள் பெற்றதில்லை என்று அறக்கட்டளையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரீட்டா சஃபியோட்டி, இந்த நடவடிக்கையைப் பாராட்டினார், ‘இதுதான் சமூக உணர்வின் சிறந்த வெளிப்பாடு’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். “ஆப்டஸ் ஸ்டேடியத்தில் வேகமாக முடிவடைந்த ஆஷஸ் டெஸ்டுக்கு நன்றி, நூற்றுக்கணக்கான கிலோக்களில் புதிய உணவு தேவையுள்ள மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.

நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள இருபது தட்டு பழங்கள் மற்றும் காய்கறிகள், நான்கு தட்டு சாண்ட்விச்கள் மற்றும் சாலடுகள், இரண்டு தட்டு ரொட்டி மற்றும் பால், ஏராளமான பால் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

ஒரே நன்கொடை அதுவும் இத்தனை பெரிய நன்கொடை இதுவரை கிடைத்ததே இல்லை என்று உணவு மீட்பு சேவை அறக்கட்டளையினர் இந்த 2 நாட்கள் டெஸ்ட்டிற்காக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியம்</p></div>
இனிமையான வெற்றிகள்... எங்கள் மனநிலையின் மாற்றம் - தெம்பா பவுமா மனம் திறப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in