பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி

பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்கெட் மைதானம் | கோப்புப்படம்

பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்கெட் மைதானம் | கோப்புப்படம்

Updated on
1 min read

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு சாம்​பியன் பட்​டம் வென்​றது. முதல் முறை​யாக அந்த அணி பட்​டம் வென்​றதை தொடர்ந்து ஜூன் 4-ம் தேத பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் வெற்றி கொண்​டாட்ட நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதையொட்டி மைதானத்​துக்கு வெளியே ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்​தனர். இதைத் தொடர்ந்து சின்​ன​சாமி மைதானத்​தில் அனைத்து வித​மான கிரிக்​கெட் போட்​டிகளை​யும் நடத்த கர்​நாடக மாநில அரசு தடை​வி​தித்​தது.

மேலும் மைதானத்​தில் மேற்​கொள்​ளப்பட வேண்​டிய பாது​காப்பு பணி​கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்​றை​யும் அரசு நியமித்​தது. இந்த குழு மைதானத்​தில் பல்​வேறு கட்ட ஆய்​வு​களை நடத்​தி​யது. இதுஒரு​புறம் இருக்க வெங்​கடேஷ் பிர​சாத் தலை​மையி​லான கர்​நாடக கிரிக்​கெட் சங்க நிர்​வாகி​கள் அரசு தரப்பு மற்​றும் விசா​ரணைக்​குழு​வுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்​தது.

இந்​நிலை​யில் கர்​நாடக அரசால் நியமிக்​கப்​பட்ட சிறப்​புக்​குழு பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் பாது​காப்பு பணி​கள் திருப்​தி​கர​மாக இருப்​ப​தாக அரசுக்கு அறிக்கை அளித்​துள்​ளது. இதன் அடிப்​படை​யில் உள்​துறை அமைச்​சகம் மைதானத்​தில் மீண்​டும் போட்​டிகளை நடத்​து​வதற்கு கர்​நாடக கிரிக்​கெட் சங்​கத்​துக்கு அனு​மதி அளித்​துள்​ளது.

கர்​நாடக கிரிக்​கெட் சங்க செய்தி தொடர்​பாள​ரான வினய் மிருத்​யுஞ்​சயா கூறும்​போது, “பெங்​களூருவில் உள்ள புகழ்​பெற்ற எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் சர்​வ​தேச மற்​றும் ஐபிஎல் போட்​டிகளை நடத்த கர்​நாடக மாநில கிரிக்​கெட் சங்​கத்​துக்கு (கேஎஸ்​சிஏ) கர்​நாடக அரசின் உள்​துறை அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதை அறி​விப்​ப​தில் நாங்​கள் மகிழ்ச்​சி​யடைகிறோம்.

அரசு மற்​றும் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களால் பரிந்​துரைக்​கப்​பட்ட குறிப்​பிட்ட விதி​முறை​கள் மற்​றும் நிபந்​தனை​களுக்கு இணங்க இந்த அனு​மதி வழங்​கப்​படு​கிறது. நிர்​ண​யிக்​கப்​பட்ட அனைத்து நிபந்​தனை​களை​யும் நிறைவேற்​று​வ​தில் கர்​நாடக கிரிக்​கெட் சங்​கம் உறு​தி​யுடன் உள்​ளது” என்​றார்.

இதற்​கிடையே ஆர்​சிபி அணி இந்த சீசனுக்​கான போட்​டிகளை ராய்ப்​பூர் மற்​றும் புனே​வில் நடத்​து​வதற்​கான பணி​களை மேற்​கொண்​டது. தற்​போது கர்​நாடக அரசு சின்​ன​சாமி மைதானத்​தில் போட்​டிகளை நடத்த அனு​மதி வழங்கி உள்​ள​தால் ஆர்​சிபி அணி உற்​சாகம் அடைந்​துள்​ளது. மேலும் அந்த அணி 300 முதல் 350 ஏஐ தொழில்​நுட்​பத்​துடன் இயங்​கக்​கூடிய கேம​ராக்​களை மைதானத்​தில் நிறுவ முன்​வந்​துள்​ளது. இதற்​காக ரூ.4.50 கோடியை செல​விட தயா​ராக இருப்​ப​தாக ஆர்​சிபி அணி, கர்​நாடக கிரிக்​கெட் சங்​கத்​திடம்​ தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்கெட் மைதானம் | கோப்புப்படம்</p></div>
திருச்சி, நாகர்கோவிலுக்கு இரண்டு அம்ரித் பாரத் ரயில்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in