8 முறை கோல்​களை தடுத்த பாட்ரிக் பீச் | FIFA WC 2026

8 முறை கோல்​களை தடுத்த பாட்ரிக் பீச் | FIFA WC 2026
Updated on
1 min read

துருக்கி அணி முயற்சி செய்த 8 கோல்​களை தடுத்த கோல் கீப்பர் பாட்ரிக் பீச் ஆஸ்திரேலிய அணி​யின் ஹீரோ​வாக மாறி​னார்.

உலகக் கோப்பையில் தங்​களது முதல் ஆட்​டத்​திலேயே சிறப்​பாக செயல்​பட்டு அவர் கோல்​களைத் தடுத்த விதம் ரசிகர்​களிடையே பாராட்​டு​களைப் பெற்​றது. இந்​தப் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய வீரரும், அனுபவம் வாய்ந்த கோல் கீப்​பரு​மான மேத்யூ ரியான் களமிறங்​கு​வார் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், ஆஸ்​திரேலிய அணி​யின் பயிற்​சி​யாளர் டோனி போபோவிக், 22 வயதான கோல்​கீப்​பர் பாட்​ரிக் பீச்​சைத் தேர்வு செய்​தார்.

8 கோல்​களைத் தடுத்த பாட்​ரிக் பீச் கூறிய​தாவது: சில நாட்​களுக்கு முன்​பு, பயிற்​சி​யாள​ரும் எங்​கள் கோல்​கீப்​பர் பயிற்​சி​யாள​ரும் என்னை அழைத்​து, நான் உலகக் கோப்​பை​யில் விளை​யாடப் போவ​தாகத் தெரி​வித்​தனர்.

அவர்​கள் என் மீது நம்​பிக்கை வைத்​திருந்​தனர். அந்த நம்​பிக்​கை​தான் இன்று இரவு களத்​தில் இறங்கி எனது பணியை சிறப்​பாகச் செய்​வதற்​கான தன்​னம்​பிக்​கையை எனக்கு அளித்​தது. இவ்​வாறு அவர் தெரி​வித்தார்.

சிட்​னியைச் சேர்ந்த இவர், ஆஸ்​திரேலி​யா​வின் ‘ஏ-லீக்’ (A-League) கால்​பந்து தொடரில் மெல்​பர்ன் சிட்டி அணிக்​காக 2 சீசன்​களில் மட்​டுமே முதன்மை கோல்​கீப்​ப​ராக விளை​யாடி​யுள்​ளார்.

இந்த ஆட்​டத்​தின்​போது துருக்கி அணி 30 முறை கோல் அடிக்க முயன்று (அவற்​றில் 8 முறை இலக்கை நோக்கி பந்தை சரி​யாகச் செலுத்​தி​யது) ஆதிக்​கம் செலுத்​தி​ய​போதும், அனுபவ​மற்ற கோல்​கீப்​ப​ராக இருந்​தும் பாட்​ரிக் பீச் சாமர்த்​தி​யத்​துடன் செயல்​பட்டு கோல்​களைத் தடுத்​தது பாராட்​டு​களைக் குவித்து வரு​கிறது.

8 முறை கோல்​களை தடுத்த பாட்ரிக் பீச் | FIFA WC 2026
மெரினா கடற்கரையில் மாயமான 2 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in