‘ஃபிளை துபாய்’ துணை விமானியின் செயலில் ஈரானுக்கு தொடர்பிருந்தால்… - ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Updated on: 
1 min read

வாஷிங்டன்: ‘ஃபிளை துபாய்’ பயணிகள் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிவிட்டு, விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்யும் செயலில் ஓமனை சேர்ந்த துணை விமானி ஈடுபட்டதாக தகவல் வெளியான நிலையில், இதன் பின்னணியில் ஈரானுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புதன்கிழமை (செப்.30) காலை 180 பயணிகளுடன் ‘ஃபிளை துபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்திய பைலட் ஸ்மித் மச்சார் (39) விமானத்தை இயக்கினார். ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் உடன் இருந்தார்.

திடீரென பைலட் அறையில் இருந்த கோடரியால் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரைத் துணை பைலட் தாக்கினார். இதில் நிலைகுலைந்த மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார். சரியான நேரத்தில் பைலட் அறையை திறந்து, சக பயணிகளின் துணையுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கவும், பயணிகளின் உயிர் காக்கவும் உதவினார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.

ட்ரம்ப் எச்சரிக்கை

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை அதிபர் ட்ரம்ப் சந்தித்தார். அப்போது ‘ஃபிளை துபாய்’ விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்யும் செயலில் ஈடுபட்ட துணை விமானி உடன் ஈரானுக்கு தொடர்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“காவலில் உள்ள துணை விமானியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நான் கேள்விப்பட்டதில் இருந்து எனக்கு தெரிந்த தகவலின் அடிப்படையில் ‘ஆம்’ என்று என்னால் பதில் சொல்ல முடியும். இருப்பினும் அதனை அறிய முயற்சிகள் நடைபெறுகிறது” என ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரானுக்கு தொடர்பு இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர். “அது குறித்து கவலை கொள்ள வேண்டாம். நிச்சயம் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்வோம். இது குறித்து அவர்களிடம் நீங்கள் கேட்கலாம். என்ன நடந்தது என்பது அவர்களுக்கு தெரியும்” என்று ட்ரம்ப் கூறினார்.

<div class="paragraphs"><p>அமெரிக்க அதிபர் ட்ரம்ப்</p></div>
“உங்களை எண்ணி நாடு பெருமை கொள்கிறது” - விமானி ஸ்மித் மச்சார் உடன் பிரதமர் மோடி உரையாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in