டி20 உலகக் கோப்பை தொடரில் போதைப்​பொருள் பயன்படுத்திய பாகிஸ்​தானின் முகமது நவாஸ்

டி20 உலகக் கோப்பை தொடரில் போதைப்​பொருள் பயன்படுத்திய பாகிஸ்​தானின் முகமது நவாஸ்
Updated on
1 min read

துபாய்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் கடந்த பிப்​ர​வரி, மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற்​றது. இந்​தத் தொடரில் சல்​மான் அலி ஆகா தலை​மை​யில் பங்​கேற்ற பாகிஸ்​தான் அணி சூப்​பர் 8 சுற்​றுடன் வெளி​யேறி இருந்​தது. அந்த அணி தனது அனைத்து ஆட்​டங்​களை​யும் இலங்​கை​யில் விளையாடி இருந்​தது.

இந்​தத் தொடரின் போது பாகிஸ்​தான் அணி​யின் ஆல்ரவுண்​ட​ரான முகமது நவாஸிடம் ஊக்க மருந்து சோதனை செய்​யப்​பட்டு இருந்​தது. இந்த முடிவு தற்​போது வெளி​யாகி உள்​ளது. இதில் முகமது நவாஸ் போதைப் பொருள் பயன்​படுத்தி இருந்​தது தெரிய​வந்​துள்​ளது. இதுதொடர்​பாக சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில், பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு தகவல் தெரி​வித்​துள்​ளது.

இதன் அடிப்​படை​யில் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் விசா​ரணையை தொடங்கி உள்​ளது. 32 வயதான முகமது நவாஸ் டி 20 உலகக் கோப்பை தொடரில் 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 15 ரன்​கள் சேர்த்து இருந்​தார். பந்​து​வீச்​சில் 7 விக்​கெட்​களை கைப்​பற்​றி​யிருந்​தார். முகமது நவாஸ் போதைப்​பொருள் சோதனை​யில் சிக்​கியதைத் தொடர்ந்​து, இங்​கிலாந்​தின் சர்ரே கவுண்டி அணி​யுடன் அவர் மேற்​கொண்​டிருந்த டி 20 பிளாஸ்ட் தொடருக்​கான ஒப்​பந்​தம் உடனடி​யாக ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் போதைப்​பொருள் பயன்படுத்திய பாகிஸ்​தானின் முகமது நவாஸ்
மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் - 152 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப் பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in