பாகிஸ்தான் அணிக்கு 8 புள்ளிகள் அபராதம்

பாகிஸ்தான் அணிக்கு 8 புள்ளிகள் அபராதம்
Updated on
1 min read

மிர்பூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை பாகிஸ்தான் அணி மெதுவாகப் பந்துவீசியது (8 ஓவர்கள் குறைவு) தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த அணிக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதமும், 8 புள்ளிகளையும் அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியில் பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளை மட்டும் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு 8 புள்ளிகள் அபராதம்
நாம் கடின காலத்துக்கு தயாராக வேண்டுமா? - எரிபொருள் விலை உயர்வும் தாக்கமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in