பாக். vs நியூஸி. ஆட்டம் மழையால் ரத்து | T20 WC 2026

பாக். vs நியூஸி. ஆட்டம் மழையால் ரத்து | T20 WC 2026
Updated on
1 min read

கொழும்பு: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் ரத்தானது.

இந்த ஆட்டம் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இருப்பினும் மழை காரணமாக மைதானம் முழுவதும் திரைச்சீலையால் மூடப்பட்டது. மழை பொழிவு தொடர்ந்த காரணத்தால் ஒரு பந்து கூட வீசாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இதை ஆட்டத்தின் நடுவர் அறிவித்தார். இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 8 அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றுக்கான ஆட்டம் சனிக்கிழமை தொடங்கியது. இந்த சூழலில் இந்த சுற்றின் முதல் ஆட்டம் மழை பொழிவு காரணமாக கைவிடப்பட்டது.

நாளை (பிப்.22) சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து - இலங்கை மற்றும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்படுகிறது. மேலும், இலங்கை அணி இந்த தொடரை இணைந்து நடத்தி வருகின்ற காரணத்தால் அந்த அணியும் அதன் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது.

பாக். vs நியூஸி. ஆட்டம் மழையால் ரத்து | T20 WC 2026
காதலி சோபியை கரம்பிடித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in