“இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது” - முன்னாள் பாக். வீரர் ஆமீர் கருத்து | T20 WC 2026

முகமது ஆமீர்

முகமது ஆமீர்

Updated on
1 min read

லாகூர்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெறாது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்திய வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை அவர் விமர்சித்திருந்தார்.

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக இந்திய அணி விளையாடி வருகிறது. சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளை இந்திய அணி எதிர்கொள்கிறது. இரண்டு பிரிவுகளாக நடைபெறும் சூப்பர் 8 சுற்றில், இந்தியா இடம்பெற்றுள்ள குரூப்-1ல் உள்ள அணிகள் எதுவும் முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியடையவில்லை.

அதேநேரத்தில் குரூப்-2ல் பாகிஸ்தான், இலங்கை, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு அணிகளும் தலா ஒரு தோல்விகளை முதல் சுற்று ஆட்டத்தில் சந்தித்தன. இருப்பினும் இலங்கை அதன் சொந்த மண்ணிலும், பாகிஸ்தான் இந்தியாவில் விளையாட மறுத்துவிட்ட காரணத்தாலும் இந்த ஆட்டங்கள் இலங்கையில் நடைபெறுகிறது. அதனால் முதல் சுற்றில் முதலிடம் பிடித்த நான்கு அணிகளும் சூப்பர் 8 சுற்றில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஐசிசி-யின் இந்த அட்டவணை பேசுபொருளாகி உள்ளது.

முகமது ஆமீர் கருத்து: “பாகிஸ்தான் உடனான ஆட்டத்தை தவிர்த்து நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய மற்ற ஆட்டங்களில் அதன் பேட்டிங் வரிசை சரிவை எதிர்கொண்டது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் விளையாடும் விதம் எந்தவொரு அணியையும் வீழ்த்தும் வகையில் உள்ளது. அதனால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது” என பாகிஸ்தான் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு ஆமீர் பேட்டி அளித்துள்ளார்.

<div class="paragraphs"><p><strong>முகமது ஆமீர்</strong></p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 உயர்வு; வெள்ளி விலையும் ஏற்றம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in