அப்​துல்​லா ஷஃபிக் சதம் விளாசல்​: 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் பதிலடி | WI vs PAK

அப்​துல்​லா ஷஃபிக் சதம் விளாசல்​: 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் பதிலடி | WI vs PAK
Updated on
1 min read

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: போர்ட் ஆஃப் ஸ்பெ​யினில் நடை​பெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்​டி​யின் 2-வது நாளான நேற்று முன்​தினம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்​ஸில் 105.1 ஓவர்​களில் 344 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜஸ்​டின் கிரீவ்ஸ் 73, ராஸ்​டன் சேஸ் 70 ரன்​கள் சேர்த்​தனர்.

இதையடுத்து பேட் செய்த பாகிஸ்​தான் அணி தொடக்க விக்​கெட்டை விரை​வாக இழந்​தது. இமாம் உல் ஹக் 14 ரன்​களில் ஷமர் ஜோசப் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய அப்​துல்லா ஷஃபிக், அஸான் அவாய்​ஸுடன் இணைந்து சீராக ரன்​கள் சேர்த்​தார்.

அஸான் அவாய்ஸ் தனது முதல் அரை சதத்தை கடந்த நிலை​யில் 71 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோமல் வாரிக்​கன் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய கேப்​டன் பாபர் அஸம், அப்​துல்லா ஷஃபிக்​குடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தார். சிறப்​பாக விளை​யாடிய அப்​துல்லா ஷஃபிக் 173 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் சதம் அடித்​தார். இது அவருக்கு சர்​வ​தேச டெஸ்ட் அரங்​கில் 6-வது சதமாக அமைந்​தது.

2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் பாகிஸ்​தான் அணி 66 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 266 ரன்​கள் எடுத்​திருந்​தது. அப்​துல்லா ஷஃபிக் 107, பாபர் அஸம் 86 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை பாகிஸ்​தான் அணி தொடர்ந்து விளை​யாடியது. பாபர் அஸம் 147 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 10 பவுண்​டரி​களு​டன் 88 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்​கிய அவாய்ஸ் ஜாபர் 1, சல்​மான் ஆகா ரன் ஏதும் எடுக்​காமல் நடையை கட்​டினர். 87 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலை​யில் பாகிஸ்​தான் அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 310 ரன்​கள் எடுத்​திருந்​தது. அப்​துல்​லா ஷஃபிக்​ 126, முகமது ரிஸ்​​வான்​ 17 ரன்​களு​டன்​ களத்​தில்​ இருந்​தனர்​.

அப்​துல்​லா ஷஃபிக் சதம் விளாசல்​: 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் பதிலடி | WI vs PAK
பாக். பயிற்சியாளராக ஸ்மித் நியமனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in