

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான மைக் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2 வருட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
லெவல்-4 பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஸ்மித், டி20 கிரிக்கெட் தொடர்களில் பரந்த அனுபவம் கொண்டவர். குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பல அணிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இம்மாத இறுதியில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் மைக் ஸ்மித், பாகிஸ்தான் அணியுடன் இணைய உள்ளார்.