பாகிஸ்தான் அணி 434 ரன்கள் குவித்து டிக்ளேர்

பாகிஸ்தான் அணி 434 ரன்கள் குவித்து டிக்ளேர்
Updated on: 
1 min read

ராவல்பிண்டி: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் போட்டி ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் நாள் ஆட்​டத்தில் பாகிஸ்​தான் அணி 67.2 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 281 ரன்​கள் எடுத்​திருந்​தது. சவுத் ஷகீல் 57, காஸி கோரி 7 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய பாகிஸ்தான் அணி 106.3 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 434 ரன்​கள் குவித்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது. சவுத் ஷகீல் 93, காஸி கோரி 48, அராஃபத் மின்​ஹாஸ் 52, ரசூல்லா 10 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 27.1 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 114 ரன்​கள் எடுத்​திருந்​தது.

லகிரு உதரா 42, பசிந்து சூரியபண்​டாரா 0, தினேஷ் சந்​தி​மால் 1 ரன்​னில் ஆட்​ட​மிழந்​தனர். கமிந்து மெண்​டிஸ் 40, தனஞ் ஜெயா டி சில்வா 22 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். கைவசம் 7 விக்கெட்கள் உள்ள நிலை​யில் 320 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்று 3-வது நாள் ஆட்​டத்தை சந்​திக்​கிறது இலங்கை அணி.

பாகிஸ்தான் அணி 434 ரன்கள் குவித்து டிக்ளேர்
தவெகவின் 6 மாத கால ஆட்சி எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X