

துபாய்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனான விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் 37 வயதான விராட் கோலி 2 சதங்கள், ஒரு அரை சதம் என 302 ரன்கள் விளாசியிருந்தார். இதன் காரணமாகவே அவர், 773 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
தென் ஆப்பிரிக்க தொடரில் 146 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா 781 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே 8 புள்ளிகள் தான் வித்தியாசம் உள்ளது.