“கோப்பைக்காக ஹார்ட் பிரேக் செய்வதில் கவலையில்லை” - நியூஸி. கேப்டன் சான்ட்னர் பகிர்வு | T20 WC 2026

நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர்

நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர்

Updated on
1 min read

அகமதாபாத்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக சில நெஞ்சங்களை உடைப்பதில் எனக்கு கவலையில்லை என நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர்.

“நீங்கள் தற்போதைய நியூஸிலாந்து அணியையும், இதற்கு முன்பு இருந்த நியூஸிலாந்து அணியையும் பார்த்தால் எங்களது நோக்கம் என்ன என்பது தெரியும். கோப்பை வெல்லும் எங்களது நோக்கத்தில் நாங்கள் தெளிவாக உள்ளோம். களசூழல் அல்லது எதிரணியை கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. ஒரு அணியாக எங்கள் திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறோம். இந்த முறையும் அதில் மாற்றம் இல்லை.

நாங்கள் கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள பேவரைட் அணி இல்லை என கருதலாம். ஆனால், அதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஒரு அணியாக சில விஷயங்களை சிறப்பாக செய்து, வலுவான செயல்திறனை வெளிப்படுத்தினாலே கோப்பை வெல்வதற்கான நம்பிக்கை நிலையை எட்டுவோம். இதற்காக சில நெஞ்சங்களை உடைப்பதிலும் எனக்கு கவலையில்லை” என சான்டனர் தெரிவித்தார்.

ஐசிசி நடத்தும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய 30 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா உடனான சூப்பர் 8 ஆட்டத்தில் மட்டுமே இந்தியா தோல்வி கண்டுள்ளது. நியூஸிலாந்து அணி 2015 முதல் 2025 வரையிலான காலத்தில் ஐசிசியின் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் 4 முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது.

<div class="paragraphs"><p>நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர்</p></div>
“அவரும் மனிதர் தானே” - பும்ரா குறித்து நியூஸி. வீரர் கிளென் பிலிப்ஸ் | T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in