நார்வே செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, குகேஷ் வெற்றி

நார்வே செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, குகேஷ் வெற்றி
Updated on
1 min read

ஓஸ்லோ: நார்வே செஸ் போட்​டி​யின் 7-வது சுற்​றில் இந்​திய கிராண்ட்​மாஸ்​டர்​கள் ஆர்​.பிரக்ஞானந்தா, டி.கு​கேஷ் ஆகியோர் வெற்றி பெற்​றனர்.

நார்​வே​யின் ஓஸ்லோ நகரில் இந்த செஸ் போட்​டிகள் நடை​பெற்று வரு​கின்​றன. நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் ஆர். பிரக்ஞானந்தா, பிரான்​ஸின் அலிரேசா பிரோஸ்​ஜாவை வீழ்த்தினார். மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​திய வீரர் டி.கு​கேஷ், அமெரிக்​கா​வின் வெஸ்லி சோவை தோற்​கடித்​தார்.

நார்வே வீரர் மேக்​னஸ் கார்ல்​சன், ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமர் ஆகியோரிடையி​லான ஆட்​டத்​தில் கார்ல்​சன் வெற்றி பெற்றார். 7-வது சுற்​றின் முடி​வில் வெஸ்​லி சோ 12.5 புள்ளிகளுடனும், அலிரேசா 10 புள்​ளி​களு​ட​னும், பிரக்​ஞானந்​தா, கார்ல்​சன், வின்​சென்ட் கீமர் ஆகியோர் தலா 9 புள்​ளி​களு​ட​னும், குகேஷ் 8 புள்ளிகளு​ட​னும் உள்​ளனர்.

நார்வே செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, குகேஷ் வெற்றி
சட்டம் - ஒழுங்கு பிரச்சினை: தூத்துக்குடி சம்பவத்தை சுட்டிக்காட்டி பழனிசாமிக்கு தவெக பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in