

ஆக்லாந்து: இந்தியாவுடன் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறும். முதலாவது சர்வதேச டி20 ஆட்டம் வரும் 22-ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட் தொடர் நவம்பர் 4-ம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் நியூஸிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் 3 போட்டிகளுக்காக ஓர் அணியும், கடைசி 2 போட்டிகளுக்காக ஓர் அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான நியூஸிலாந்து அணி விவரம்:
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நேதன் ஸ்மித், பிளேர் டிக்னர், வில் யங்.
4 மற்றும் 5-வது ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்:
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டஃபி, மாட் பிஷர், லாக்கி ஃபெர்குசன், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), நிக் கெல்லி, டிம் செய்பர்ட் (விக்கெட் கீப்பர்), பிளேர் டிக்னர், வில் யங்.