கிறைஸ்ட்சர்ச்: இந்தியா ‘ஏ’ – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 346 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தில் 62 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. மேத்யூ பாயல் 107, டீன் பாக்ஸ்கிராஃப்ட் 80 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து ‘ஏ’ அணி 132.5 ஓவர்களில் 424 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. மேத்யூ பாயல் 110, டீன் பாக்ஸ்கிராஃப்ட் 93, கிறிஸ்டியன் கிளார்க் 41, ஃபிரேசர் ஷீட் 40 ரன்கள் சேர்த்தனர். இந்தியா ‘ஏ’ அணி தரப்பில் முகேஷ் குமார் 5, முகமது சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
78 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20, சாய் சுதர்சன் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நான்காவது நாள் ஆட்டம் தற்போது நடைபெறுகிறது. இதில் 45 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. மூன்றாவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரத்தோட் இணைந்து 220+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.