லாசன் டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா

லாசன் டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா
Updated on
1 min read

புதுடெல்லி: சு​விட்​சர்​லாந்​தின் லாசன் நகரில் வரும் 21-ம் தேதி டயமண்ட் லீக் தடகள போட்டி நடை​பெறுகிறது. இதில் ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இரு முறை ஒலிம்​பிக்​கில் பதக்​கம் வென்ற இந்​திய வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்​கு​கிறார்.

சமீபத்​தில் முடிவடைந்த கிளாஸ்கோ காமன்​வெல்த் போட்​டி​யில் நீரஜ் சோப்ரா 85.83 மீட்​டர் தூரம் ஈட்டி எறிந்து சீசனின் சிறந்த செயல்​பாட்​டுடன் வெள்​ளிப் பதக்​கம் வென்​றிருந்​தார். லாசன் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்​ரா​வுக்கு காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யில் தங்​கம் வென்​றவரும் உலகின் முன்​னணி வீரரு​மான இலங்​கை​யின் ருமேஷ் பதிரகே, ஒலிம்​பிக் சாம்​பிய​னான பாகிஸ்​தானின் அர்​ஷத் நதீம், நடப்பு உலக சாம்​பிய​னான டிரினி​டாட் மற்​றும் டொபாகோ​வின் கேஷார்ன் வால்​காட், கிரென​டா​வின் முன்​னாள் உலக சாம்​பியன் ஆண்​டர்​சன் பீட்​டர்ஸ் மற்​றும் முன்​னாள் ஒலிம்​பிக் சாம்​பிய​னான ஜெர்​மனி​யின் தாமஸ் ரோலர் உள்​ளிட்​டோர் கடும் சவால்​தரக்​கூடும்.

மேலும் இந்​தப்​போட்​டி​யில் டோக்​கியோ ஒலிம்​பிக்​கில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற செக் குடியரசின் ஜேக்​கப் வத்​லேச், ஜெர்​மனி​யின் ஜூலியன் வெபர், சுவிட்​சர்​லாந்​தின் சைமன் வீலாண்ட் மற்​றும் இந்த சீசனின் உலக தரவரிசை​யில் 2-ம் இடத்​தில் உள்ள அமெரிக்​கா​வின் கர்​டிஸ் தாம்​சன் ஆகியோ​ரும் பங்​கேற்​கின்​றனர்.

நீரஜ் சோப்ரா கடந்த 2022-ம் ஆண்டு நடை​பெற்ற லாசன் டயமண்ட் லீக் தொடரில் 89.08 மீட்​டர் தூரம் எறிந்து சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தார். தொடர்ந்து 2024-ம் ஆண்டு தொடரில் 89.49 மீட்​டர் தூரம் எறிந்து இரண்​டாம் இடத்​தைப் பிடித்​திருந்​தார்.

மறு​புறம், 89.75 மீட்​டர் தூரம் எறிந்து காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யில் தங்​கம் வென்ற பதிரகே, மிகுந்த தன்​னம்​பிக்​கை​யுட​னும் சிறப்​பான ஃபார்​முட​னும் லாசன் டயமண்ட் லீக் போட்​டிக்கு வரு​கிறார். கடந்த ஜூன் மாதம் ரோமில் நடை​பெற்ற ‘கோல்​டன் கலா பியட்ரோ மென்​னி​யா’ போட்​டி​யில் 92.62 மீட்​டர் தூரம் எறிந்​ததே பதிரகே​வின் தனிப்​பட்ட சிறந்த சாதனை​யாகும். இதன் மூலம் இந்த சீசனில் 90 மீட்​டர் இலக்​கைக் கடந்த ஒரே ஈட்​டி எறிதல்​ வீர​ராக அவர்​ தி​கழ்​கிறார்​.

லாசன் டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா
“நான் யாரையும் தவறாக பேசவில்லை; எனது பேச்சை திரித்துவிட்டனர்” - உதயநிதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in