குர்னூர் பிரார் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்: சொல்கிறார் மோர்னே மோர்கல்

குர்னூர் பிரார் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்: சொல்கிறார் மோர்னே மோர்கல்
Updated on: 
1 min read

கிறைஸ்ட்சர்ச்: இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப் பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடை​யி​லான 2 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெலிங்​டனில் நடை​பெற்ற முதல் போட்டி டிராவில் முடிவடைந்​தது. 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட் சர்ச்​சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்​தில் இன்று அதி​காலை தொடங்​கியது.

இதற்​கிடையே நேற்று நடை​பெற்ற பத்​ரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் பந்​து​வீச்சு பயிற்​சி​யாளரான மோர்னே மோர்​கல் கூறிய​தாவது:

முதல் டெஸ்ட் போட்​டி​யில் அன்​ஷுல் கம்​போஜ் சிறப்​பாகவே செயல்​பட்​டார். வெளி​யில் இருந்து அவரது பந்​து​வீச்சை மதிப்​பிடுவது கடினம். 2-வது நாள் ஆட்​டத்​துக்​குப் பிறகு விக்​கெட் கீப்​பர் ஸ்​டெம்​பு​களுக்கு அரு​கில் நின்று பந்​தைப் பிடிக்க வேண்​டிய நிலை ஏற்​பட்​டது. அது கவலைக்​குரிய விஷயம்.

அன்​ஷுல் கம்​போஜ் கட்​டுப்​பாட்​டுடன் பந்​து​வீசி நல்ல நிலையை ஏற்​படுத்​திக் கொடுத்​தார். அவரை மட்​டும் குறிவைத்து விமர்​சிப்​பது நியாயமல்ல. அணிக்​காக கடினமான ஓவர்​களை வீசும் அவருக்கு நாம் ஆதரவளிக்க வேண்​டும். ஆடுகளம் தொடக்​கத்​திலேயே தனது வேகத்தை இழந்​து​விட்​டது. இதன் காரண​மாகவே பந்​து​வீச்​சாளர்​களின் வேகமும் குறைந்​தது. ஆடுகளம் தட்​டை​யாக மாறு​வது இயல்​புதான். ஆனால், அதன் வேகம் இவ்​வளவு விரைவாகக் குறையக் கூடாது.

புதிய பந்​தில் பந்​து​வீச்​சாளர்​கள் துணிச்​சலுடன் செயல்​பட வேண்​டும். இந்​திய அணி​யில் அனைத்து வேகப்​பந்து வீச்​சாளர்​களும் உடற்​தகுதி​யுடன் உள்​ளனர். அணித் தேர்​வின் போது சில நேரங்​களில் கடினமான முடிவு​களை எடுக்க வேண்​டி​யிருக்​கும். முகமது சிராஜிடம், சிறிது பின்​னோக்​கிச் சென்று தனது செயல்​பாடுகளை மதிப்​பீடு செய்து, எவற்​றில் முன்​னேற்​றம் தேவை என்​ப​தைப் பார்க்​குமாறு கூறியுள்​ளேன்.

ஒவ்​வொரு மோச​மான ஆட்​டத்​துக்​குப் பிறகும் அதைப் பற்​றியே சிந்​தித்​துக் கொண்​டிருக்​கக் கூடாது. இந்​திய வீரர்​கள் அனைவரும் உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறுதிப்​போட்​டி​யில் விளை​யாட வேண்​டும் என விரும்​பு​கின்​றனர். எனவே, மோச​மாக அமைந்த ஒவ்​வொரு செஷனையும் பற்றி சிந்​தித்​துக் கொண்ட இருக்​கக்​கூடாது. அவற்றை கடந்து சென்று சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்​து​வதில் கவனம் செலுத்த வேண்​டும்.

இளம் வேகப்​பந்து வீச்​சாளர் குர்​னூர் பிரார் தனது சிறப்​பான செயல்​பாடுகள் மூலம் அணி​யில் இடம்​பி​டிப்​ப​தற்​கான வாய்ப்பை உரு​வாக்கி வரு​கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்​கும்​போது அதைச் சரியாகப் பயன்​படுத்​தும் வகை​யில், அவரை 100 சதவீதம் தயாராக வைத்​திருப்​பதே எனது பணி. இவ்​வாறு மோர்னே மோர்​கல் கூறினார்.

குர்னூர் பிரார் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்: சொல்கிறார் மோர்னே மோர்கல்
பும்ராவை எதிர்கொள்ள புதிய திட்டமா? - மனம் திறக்கும் டாம் லாதம்

X