சிறுவர்கள் மூலம் RCB vs SRH ஐபிஎல் போட்டியில் மொபைல் போன்கள் திருட்டு

ரூ.18 லட்சம் மதிப்பிலான போன்களை மீட்ட போலீஸார்
சிறுவர்கள் மூலம் RCB vs SRH ஐபிஎல் போட்டியில் மொபைல் போன்கள் திருட்டு
Updated on
1 min read

பெங்களூரு: கடந்த 28-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சிறுவர்கள் மூலம் நூதன முறையில் மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பான புகார்களை கொண்டு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் பலர் தங்கள் மொபைல் போன்களை களவு கொடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கப்பன் பார்க் காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் இதற்கு காரணமாக இருந்த முக்கிய நபர் ஒருவரை காவல் துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் சிறுவர்கள் சிலரும் உள்ளதாக தகவல்.

சிசிடிவி ஆதாரங்களை கொண்டு காவல் துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த குழு கர்நாடக மாநிலத்துக்கு வெளியில் இருந்து செயல்பட்டதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதற்காக அந்த குழு சிறுவர்களை நியமித்துள்ளது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது மட்டும் போன்களை தவறவிட்டதாக சுமார் 29 வழக்குகள் பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில் ‘ஐபிஎல் போட்டியை காண வந்த போது போனை தவறவிட்டதாக’ தெரிவித்துள்ளனர். அதுதான் இந்த கும்பலை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 போன்களை அந்த கும்பலிடம் இருந்து மீட்டுள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் பின்னணியில் உள்ள மற்றவர்களை பிடிக்கும் முயற்சி நடைபெறுகிறது. தற்போது போலீஸ் விசாரணையில் இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர் ஒருவரும், சிறுவர்கள் சிலரும் உள்ளனர் என்று பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் மூலம் RCB vs SRH ஐபிஎல் போட்டியில் மொபைல் போன்கள் திருட்டு
“அதிமுகவை விலைக்கு வாங்கி இருக்கிறது பாஜக” - திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in