

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிஷேக் போரல், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டார்.
“கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவும் கிடைத்தது. அதையடுத்து திங்கள்கிழமை இரவு அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தோம்” என்று ஹூக்லி (ஊரகம்) காவல் துறை கண்காணிப்பாளர் குனார் பூஷன் சிங்
அவர் மீது காவல் துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69-ம் அடங்கும். அதோடு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
கடந்த ஜூன் 23-ம் தேதி அன்று கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவி, மோக்ரா காவல் நிலையத்தில் அபிஷேக் போரல், தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தார். அவர்கள் இருவரும் சுமார் மூன்றரை ஆண்டுகள் இணைந்திருந்ததாக தனது புகாரில் அந்த மாணவி தெரிவித்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இப்போது அவர், போலீஸ் காவலில் உள்ளார்.