

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறியுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் லக்சயா சென் 21-16 15-21 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கப்பூர் வீரர் ஜியா ஹெங் ஜேசனை வீழ்த்தினார்.