

குர்னூர் பிரார்
வெலிங்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி 20 தொடரை இந்திய அணி 3-2 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து தற்போது ஒருநாள் போட்டித் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இந்தத் தொடர் இன்றுடன் முடிவடைகிறது.
இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகள் விளையாட உள்ளன. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் அங்கமாக அமைந்துள்ள இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் 19-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நியூஸிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்பதால் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளரான குர்னூர் பிரார் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளதால் இன்று நடைபெறும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் குர்னூர் பிரார் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.