

நேதன் லயன்
மெல்பர்ன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடரில் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 39 வயதான சீனியர் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் நீக்கப்பட்டுள்ளார். 13 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக இடம் பெற்று வந்த நேதன் லயன் முதன்முறையாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.
நேதன் லயன் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 577 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது. இந்தத் தொடரில் நேதன் லயன் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.
கூப்பர் கானொலி, மார்னஷ் லபுஷேன் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். 13 பேர் கொண்ட அணியில் சுழற்பந்து வீச்சாளராக கோரி ரோச்சிசியோலி சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 9-ம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், ஜேக் கிளேட்டன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஷ், கேமரூன் கிரீன், கோரி ரோச்சிசியோலி, மைக்கேல் நேசர், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட்.