

ஓமன்: யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது முதல் ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதியது.
முதலில் பேட் செய்த நேபாளம் அணி 42.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 129 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 19.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.
ஆர்யாவீர் சேவக் 52 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்களும், கேப்டன் லக்ஷயா சந்தனி 63 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் விளாசினர்.