

மும்பை: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் வருகிற செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் 24-ல் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக் ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையேயான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 27-ல் தொடங்குகிறது. இதனால் கவுதம் காம்பீர் ஆசிய விளையாட்டுக்கு பயிற்சியாளராக செயல்பட முடியவில்லை. இதன் காரணமாகவே விவிஎஸ் லக் ஷ்மன் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார்.