இறுதிச் சுற்றில் லக்சயா சென்; தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங் | ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப்

லக்சயா சென், தஜிந்தர்பால் சிங்

லக்சயா சென், தஜிந்தர்பால் சிங்

Updated on
1 min read

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்சயா சென், 16-வது இடத்தில் உள்ள கனடாவின் விக்டர் லாயுடன் மோதினார்.

ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-16, 18-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

கால்பந்தில் சென்னை வெற்றி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 42-வது நிமிடத்தில் இம்ரான் கான் கோல் அடித்தார்.

தங்கம் வென்றார் தஜிந்தர்பால் சிங்: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இந்தியா ஓபன் எறிதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான குண்டு எறிதலில் பஞ்சாப் வீரர் தஜிந்தர்பால் சிங் 20.51 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதே மாநிலத்தை சேர்ந்த கரண்வீர் சிங் (19.36மீ) வெள்ளியும் ஹரியாணாவின் சன்யாம் (18.28மீ) வெண்கலமும் கைப்பற்றினர்.

<div class="paragraphs"><p>லக்சயா சென், தஜிந்தர்பால் சிங் </p></div>
வளைகுடா நாடுகளில் இருந்து 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: டிஜிசிஏ தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in