மதுரையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கோவை கிங்ஸ் | TNPL 2026

கோவை கிங்ஸ் அணியினர்

கோவை கிங்ஸ் அணியினர்

Updated on
1 min read

சென்னை: டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று கோவை கிங்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் கோவை கிங்ஸ் அணி பட்டம் வென்றது. அந்த அணி வெல்லும் மூன்றாவது டிஎன்பிஎல் பட்டமாக இது அமைந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 47 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். பாலசுப்ரமணியம் சச்சின் 33 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன் ஷாருக்கான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ராதாகிருஷ்ணன் 13, சுரேஷ் லோகேஷ்வர் 11, அம்ப்ரிஷ் 6, தீபன் லிங்கேஷ் 1 ரன்களில் நடையை கட்டினர். மாதவ பிரசாத் 13, கிஷோர் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மதுரை பேந்தர்ஸ் அணி தரப்பில் சரவணன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 183 ரன்கள் இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் அணி பேட்டிங் செய்ய ஆயத்தமானது.

இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்தில் மதுரை பேட்ஸ்மேன் ராம் குமார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் சித்தார்த் மகாதேவனும் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்த ஓவர்களில் மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

சரியான தொடக்கம் கிடைக்காத நிலையில் சதுர்வேத் 40, ஹரி ராகவேந்திரா மற்றும் கேப்டன் பாலச்சந்தர் அனிருத் தலா 24 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

14.2 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது மதுரை. இதன் மூலம் 84 ரன்களில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக்கான் மற்றும் மணிமாறன் சித்தார்த் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். தீபன் லிங்கேஷ் 2 மற்றும் ஜாதவேத் சுப்ரமணியன் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இதில் ஆட்ட நாயகன் விருதை ஆந்த்ரே சித்தார்த்தும், தொடர் நாயகன் விருதை பாலசுப்ரமணியம் சச்சினும் வென்றனர்.

<div class="paragraphs"><p>கோவை கிங்ஸ்&nbsp;அணியினர்</p></div>
கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in