

யோசு: தென் கொரியாவின் யோசு நகரில் கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்மோல் ஹார்ப் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் ரேச்சலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான தன்வி சர்மா 21-16, 12-21, 21-17 என்ற செட் கணக்கில் ஜப்பானி மனாமி மிசுவை தோற்கடித்து 2-வது சுற்றில் நுழைந்தார்.