ரஞ்சி கோப்பை இறு​திப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா அணி

ரஞ்சி கோப்பை இறு​திப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா அணி
Updated on
1 min read

லக்னோ: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்​தில் கர்​நாடகா - உத்​த​ராகண்ட் அணி​கள் லக்​னோ​வில் விளை​யாடி வந்​தன. இதன் முதல் இன்னிங்ஸிங் கர்​நாடகா 736 ரன்கள் குவித்​தது. உத்தராகண்ட் அணி முதல் இன்​னிங்​ஸில் 233 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

503 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளையாடிய கர்​நாடகா அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 63.5 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 299 ரன்கள் எடுத்​திருந்​தது. நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய கர்​நாடகா அணி 74.3 ஓவர்​களில் 323 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கே.எல்​.​ராகுல் 86 ரன்கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

இதையடுத்து 827 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த உத்​த​ராகண்ட் அணி 62 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 260 ரன்​கள் எடுத்திருந்த போது ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கர்​நாடகா அணி சார்​பில் ஸ்ரேயஸ் கோபால் 3, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்​களை வீழ்த்​தினர்.

முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​றதன் அடிப்படையில் கர்நாடகா அணி இறு​திப் போட்​டிக்கு முன்னேறியது. வரும் 24-ம் தேதி முதல்​ 28-ம்​ தேதி வரை நடை​பெறும்​ இறு​திப்​ போட்​டி​யில்​ கர்நாட​கா - ஜம்​மு & ​காஷ்மீர்​ அணிகள்​ மோதுகின்​றன.

ரஞ்சி கோப்பை இறு​திப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா அணி
“ஏஐ அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்” - டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in