பெல்ஜியத்தை சமாளித்து அரை இறுதியில் கால்பதிக்குமா இந்திய அணி? | ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி

பெல்ஜியத்தை சமாளித்து அரை இறுதியில் கால்பதிக்குமா இந்திய அணி? | ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி
Updated on
2 min read

சென்னை: 14-வது ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற்று வருகிறது. லீக் ஆட்​டங்​கள் நேற்று முன்​தினம் நிறைவடைந்த நிலை​யில் கால் இறுதி சுற்று இன்று சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்​தில் நடை​பெறுகிறது.

இதில் இரவு 8 மணிக்கு நடை​பெறும் கடைசி கால் இறுதி ஆட்டத்தில் இந்​தியா - பெல்​ஜி​யம் அணி​கள் பலப்​பரீட்சை நடத்துகின்​றன. லீக் சுற்​றில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றிருந்த இந்திய அணி 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்து இருந்​தது. இந்த 3 ஆட்​டங்​களி​லும் இந்திய அணி 29 கோல்​களை அடித்து அசத்​தி​யது.

அதேவேளை​யில் ஒரு கோலை கூட எதிரணி​யிடம் இருந்து வாங்​க​வில்​லை. எனினும் இந்​திய அணிக்கு உண்​மை​யான சவால் இன்று பெல்​ஜி​யம் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில்​தான் காத்​திருக்​கிறது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி சிறப்​பாக விளை​யாடி வெற்​றியை வசப்​படுத்​தா​விட்​டால் சொந்த மண்​ணில் 9 வருடங்​களுக்கு பிறகு சாம்​பியன் பட்​டம் வெல்ல வேண்​டும் என்ற கனவு நிறைவேறாத நிலை உரு​வாகும்.

லீக் சுற்​றில் இந்​திய அணி அடித்த 28 கோல்​களில் 18 கோல்​கள் பீல்டு கோலாக அமைந்​திருந்​தது. 9 கோல்​களை பெனால்டி கார்னர் வாய்ப்​பு​களி​லும், 2 கோல்​களை பெனால்டி ஸ்டிரோக் வாயி​லாக​வும் இந்​திய அணி அடித்​திருந்​தது. இதே பார்மை தொடர்​வ​தில் இந்​திய அணி முனைப்பு காட்​டக்​கூடும்.

முதல் இரு போட்​டிகளி​லும் கோல் மழை பொழிந்த இந்​திய அணி​யால் சுவிட்​சர்​லாந்து அணிக்கு எதி​ராக 5 கோல்​களை மட்​டுமே அடிக்க முடிந்​தது. மேலும் இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் டிபன்ஸை சுவிட்​சர்​லாந்து அணி சோதனைக்கு உட்​படுத்​தி​யது. எனினும் கோல் கீப்​பர்​களான பிரின்ஸ் தீப் சிங், பிக்​ரம்​ஜித் சிங் ஆகியோர் அற்​புத​மாக செயல்​பட்டு சுவிட்​சர்​லாந்து அணி​யின் கோல் அடிக்​கும் வாய்ப்​பு​களை தகர்த்​திருந்​தனர்.

இது ஒரு​புறம் இருக்க இந்​திய அணி பெனால்டி கார்​னர் வாய்ப்புகளை கோல்​களாக மாற்​று​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்த வேண்டிய நிலை​யில் உள்​ளது. இந்த விஷ​யத்​தில் கேப்டன் ரோஹித், அன்​மோல் ஏக்கா ஆகியோர் கூடு​தல் பொறுப்புடன் செயல்​படும் பட்​சத்​தில் அணி​யின் பலம் அதிகரிக்கும்.

லீக் சுற்​றில் ஸ்டிரைக்​கர்​களான தில்​ராஜ் சிங் 6 கோல்​களும், மன்​மீத் சிங் 5 கோல்​களும், அர்​ஷ்தீப் சிங் 4 கோல்​களும், அஜீத் யாதவ் 2 கோல்​களும் அடித்து அசத்​தி​யிருந்​தனர். ரோசன் குஜூர், அட்​ரோய் ஏக்​கா, அங்​கித் பால், இங்​கலெம்பா லுவாங் தவுனோஜாம் ஆகியோர் நடு​களத்​தில் சிறப்​பான செயல் திறனை வெளிப்படுத்தினர். ஆனால் வலு​வான அணி​களுக்கு எதி​ராக இவர்​கள் எவ்​வாறு செயல்​படு​கிறார்​கள் என்​ப​தைப் பார்க்க வேண்​டும்.

லீக் சுற்​றில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றிருந்த பெல்​ஜி​யம் அணி 2 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 2-வது இடம் பிடித்​திருந்​தது. 2-வது இடம் பிடித்த சிறந்த அணி​களுள் ஒன்​றாக தேர்​வாகியே பெல்ஜியம் கால் இறுதி சுற்​றில் நுழைந்​தது. நடப்பு தொடரில் பெல்​ஜி​யம் அதிக கோல்​கள் அடித்த அணி​களின் பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி லீக் சுற்​றில் 22 கோல்​கள் அடித்துள்​ளது. இதில் 11 கோல்​கள் பீல்டு கோல்​களாகும். 11 கோல்கள் பெனால்டி கார்​னர் வாய்ப்​பு​களில் அடிக்கப்பட்டிருந்தது.

இன்று நடை​பெறும் மற்ற கால் இறுதி ஆட்​டங்​களில் ஸ்பெ​யின் -நியூஸிலாந்து (பிற்​பகல் 12.30மணி), பிரான்ஸ் - ஜெர்​மனி (பிற்​பகல் 3 மணி), நெதர்​லாந்து - அர்​ஜெண்​டினா (மாலை 5.30 மணி) அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

இந்திய வீரர்களுக்கு ஸ்ரீஜேஷ் எச்​சரிக்கை: இந்​திய அணி​யின் பயிற்​சி​யாள​ரான பி.ஆர்​.ஸ்ரீஜேஷ் கூறும்​போது, “நிச்​சய​மாக நாங்​கள் மேம்​படுத்த வேண்​டிய பகு​தி​கள் உள்​ளன. கால் இறுதி சுற்​றில் இருந்​துதான் உண்​மை​யான போட்டி தொடங்​கு​கிறது. எத்​தனை முறை வட்​டத்​துக்​குள் நுழைகிறோமோ அவற்றை பெனால்டி கார்​னர்​களாகவோ அல்​லது கோல்​களாகவோ அல்​லது ஷாட்களாகவோ மாற்ற வேண்​டும்.

மேலும் நமது டிஃபன்​ஸை​யும் இறுக்க வேண்​டும், சில தேவையற்ற பெனால்டி கார்​னர்​களை விட்​டுக்​கொடுக் ​கிறோம். தற்​காப்பு கட்​டமைப்​பில் அதிக கவனம் செலுத்​து​வதும், வீரர்​கள் முன்​னோக்கி சென்று தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்​வதும் முக்கியம். ஜூனியர் உலகக் கோப்பை எளி​தான தளம் அல்ல, இங்கு விளை​யாடும் எந்த அணி​களும் எளி​தான பாதையை வழங்காது. எந்​தத்​ தவறு செய்​தா​லும்​ அதற்​கான விலை​யை ​கொடுக்​க நேரிடும்​” என்றார்.

பெல்ஜியத்தை சமாளித்து அரை இறுதியில் கால்பதிக்குமா இந்திய அணி? | ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி
நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in