ஜூனியர் மகளிர் கால்பந்து: தமிழ்நாடு ஹாட்ரிக் வெற்றி

ஜூனியர் மகளிர் கால்பந்து: தமிழ்நாடு ஹாட்ரிக் வெற்றி
Updated on
1 min read

அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

இதன் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 12-0 என்ற கோல் கணக்கில் ஆந்திராவையும், 2-வது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தான் அணியையும் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று அருணாச்சலபிரதேச அணியை எதிர்த்து விளையாடியது.

இதில் தமிழ்நாடு அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் ஜி.நயனா 3 கோல்கள் (7, 19, 45+3 நிமிடங்கள்) அடித்து அசத்தினார். எஸ்.தர்ஷினி (18-வது நிமிடம்) கே.துர்கா (49-வது நிமிடம்), சோபிகா செல்லம்மாள் (82-வது நிமிடம்), சஹானா (85-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். தமிழக அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

ஜூனியர் மகளிர் கால்பந்து: தமிழ்நாடு ஹாட்ரிக் வெற்றி
ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரையில் திறப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in