ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சர்வதேச ஹாக்கி மைதானம் மதுரையில் திறப்பு

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Updated on
1 min read

மதுரை: மதுரை எம்​ஜிஆர் (ரேஸ் கோர்​ஸ்) விளை​யாட்டு அரங்க வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள ரூ.20 கோடி மதிப்​பிலான சர்​வ​தேச ஹாக்கி மைதானம் மற்​றும் பார்​வை​யாளர் அரங்​கத்தை துணை முதல்​வர் உதயநிதி நேற்று திறந்து வைத்​தார்.

சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனம், ஹாக்கி இந்​தி​யா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் 14-வது ஜூனியர் ஆடவர் உலகக்​கோப்பை ஹாக்கி போட்​டிகள் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்​னை, மதுரை​யில் நடை​பெறுகிறது. இதற்​காக மதுரை எம்​ஜிஆர் விளை​யாட்டு அரங்க வளாகத்​தில் ரூபாய் 20 கோடி மதிப்​பில் புதிய ஹாக்கி மைதானம் மற்​றும் பார்​வை​யாளர் அரங்​கம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் திறப்பு விழா நேற்று நேற்று மாலை நடை​பெற்​றது.

அமைச்​சர்​கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாக​ராஜன் ஆகியோர் தலைமை வகித்​தனர். துணை முதல்​வர் உதயநிதி ஹாக்கி மைதானம் மற்​றும் பார்​வை​யாளர் அரங்கை திறந்து வைத்​தார்.

இவ்​விழா​வில் அரசு கூடு​தல் தலை​மைச் செயலர் அதுல்ய மிஸ்​ரா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநக​ராட்சி ஆணை​யர் சித்​ரா, எம்​எல்​ஏக்​கள் தளப​தி, ஆ.வெங்​கடேசன், பூமி​நாதன், துணை மேயர்​ நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

<div class="paragraphs"><p>படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி</p></div>
டெஃப்​ஒலிம்​பிக்ஸ் போட்டி: தங்கம் வென்றார் மஹித் சந்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in