ஆஸி. மண்ணில் முதன்முறையாக ஜோ ரூட் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு

ஆஸி. மண்ணில் முதன்முறையாக ஜோ ரூட் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு
Updated on
2 min read

பிரிஸ்பன்: ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்​டின் முதல் நாள் ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 325 ரன்​கள் குவித்​தது. ஆஸ்திரேலிய மண்​ணில் முதன்​முறை​யாக சதம் விளாசி அசத்தினார் சீனியர் பேட்​ஸ்​மே​னான ஜோ ரூட்.

பிரிஸ்​பனில் உள்ள காபா மைதானத்​தில் பகலிரவு போட்​டி​யாக நேற்று தொடங்​கிய இந்த டெஸ்​டில் டாஸ் வென்ற இங்​கிலாந்து அணி பேட்​டிங் செய்​தது. அந்த அணி​யில் ஒரே ஒரு மாற்​றம் செய்​யப்​பட்டு இருந்​தது. காயம் அடைந்த மார்க் வுட்​டுக்கு பதிலாக சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான வில் ஜேக்ஸ் சேர்க்​கப்​பட்​டார். இதே​போன்று ஆஸ்​திரேலிய அணி​யில் நேதன் லயன் நீக்​கப்​பட்டு மைக்​கேல் நேசர் களமிறக்​கப்​பட்​டார். பேட்​டிங்கை தொடங்​கிய இங்​கிலாந்து அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. பென் டக்​கெட், ஆலி போப் ஆகியோர் ரன் ஏதும் எடுக்​காத நிலையில் மிட்​செல் ஸ்டார்க் பந்​தில் ஆட்​ட​மிழந்​தனர்.

5 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை பறி​கொடுத்த நிலை​யில் களமிறங்​கிய ஜோ ரூட், ஸாக் கிராலி​யுடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தார். 117 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை மைக்​கேல் நேசர் பிரித்​தார்.

தனது 20-வது அரை சதத்தை கடந்த ஸாக் கிராலி 93 பந்​துகளில், 11 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​கள் எடுத்த நிலை​யில் மைக்​கேல் நேசர் பந்தை மிட்விக்​கெட் திசை​யில் அடிக்க முயன்​ற​போது மட்டை விளிம்​பில் பட்டு விக்​கெட் கீப்​பர் அலெக்ஸ் கேரி​யிடம் கேட்ச் ஆனது.

இதையடுத்து களமிறங்​கிய ஹாரி புரூக் 33 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 31 ரன்​கள் எடுத்த நிலை​யில் மிட்​செல் ஸ்டார்க் பந்​தில் 2-வது சிலிப் திசை​யில் நின்ற கேப்​டன் ஸ்டீவ் ஸ்மித்​திடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார்.

இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் 49 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்​கிய ஜேமி ஸ்மித் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் ஸ்காட் போலண்ட் பந்​தில் ஸ்டெம்பை பறி​கொடுத்​தார்.

சீரான இடைவெளி​யில் விக்​கெட்​கள் சரிந்த போதி​லும் நிதான​மாக பேட் செய்த ஜோ ரூட் 181 பந்​துகளில், 11 பவுண்​டரி​களு​டன் தனது 40-வது சதத்தை விளாசி​னார். டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய மண்​ணில் அவர், அடித்த முதல் சதமாக இது அமைந்​தது. இதற்கு முன்​னர் 29 இன்​னிங்​ஸ்​களில் இங்கு விளை​யாடி உள்ள அவரின் அதி​கபட்ச ஸ்கோர் 89 ஆக இருந்​தது. ஜோ ரூட் சதம் அடித்த பின்​னர் வில் ஜேக்ஸ் (19), கஸ் அட்​கின்​சன் (4), பிரைடன் கார்ஸ் (0) ஆகியோரை சீரான இடைவெளி​யில் ஆட்​ட​மிழக்​கச் செய்து இங்​கிலாந்து அணிக்கு அழுத்​தம் கொடுத்​தார் மிட்​செல் ஸ்டார்க்.

அப்​போது இங்​கிலாந்து அணி 264 ரன்​களுக்கு 9 விக்​கெட்​களை இழந்​திருந்​தது. இதனால் அந்த அணி விரை​வாக ஆட்​ட​மிழக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் கடைசி விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய ஜோப்ரா ஆர்ச்​சர் அதிரடி​யாக விளை​யாடி மிரட்​டி​னார். மிட்​செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் பந்​துகளில் சிக்​ஸர் விளாசி அசத்​தி​னார். ஜோப்ரா ஆர்ச்​சரின் அதிரடி​யால் இங்​கிலாந்து அணி 71-வது ஓவரில் 300 ரன்​களை கடந்​தது. அவருடன் இணைந்து ஜோ ரூட்​டும் விரை​வாக ரன்​கள் சேர்க்க முயன்​றார்.

முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இங்​கிலாந்து அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 325 ரன்​கள் குவித்​தது. ஜோ ரூட் 202 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 15 பவுண்​டரி​களு​டன் 135 ரன்​களும், ஜோப்ரா ஆர்ச்​சர் 26 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 32 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் மிட்​செல் ஸ்டார்க் 19 ஓவர்​களை வீசி 71 ரன்​களை வழங்கி 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். ஸ்காட் போலண்ட், மைக்​கேல் நேசர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்​. இன்​று 2-வது நாள்​ ஆட்​டம்​ நடை​பெறுகிறது.

ஆஸி. மண்ணில் முதன்முறையாக ஜோ ரூட் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு
புழல் மகளிர் சிறையில் கைதிகள் இடையே மோதல்: திருநங்கை மீது வழக்கு பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in