

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றுக்கு அமெரிக்க வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா முன்னேறியுள்ளார்.
லண்டனில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள ஜெஸ்ஸிகா பெகுலா 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான இவா ஜோவிக்கை வீழ்த்தினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான போலந்தின் இகாஸ்வியாடெக் தோல்வி கண்டார். பிலிப்பைன்ஸின் அலெக்சாண்ட்ரா ஈலா 6-6, 6-2 என்ற செட் கணக்கில் நடப்புச் சாம்பியன் ஸ்வியாடெக்கை தோல்வியுறச் செய்து வெளியேற்றினார்.