2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலிய அணியில் ஜேக் வெதரால்டு நீக்கம்

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலிய அணியில் ஜேக் வெதரால்டு நீக்கம்
Updated on
1 min read

மேக்கே: வங்​கதேச கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்​டி​யில் வங்​கதேச அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று சாதனை படைத்​தது.

இந்​நிலை​யில் 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி மேக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

இந்த போட்​டிக்​கான 13 பேர் கொண்ட ஆஸ்​திரேலிய அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் முதல் டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடிய தொடக்க வீர​ரான ஜேக் வெத​ரால்டு நீக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு பதிலாக மேட் ரென்ஷா சேர்க்​கப்​பட்​டுள்​ளார். மற்​றபடி அணி​யில் மாற்​றங்​கள் செய்​யப்​பட​வில்​லை.

ஜேக் வெத​ரால்டு முதல் டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் 23 ரன்​களும், 2-வது இன்​னிங்​ஸில் ரன் ஏதும் எடுக்​காமலும் ஆட்​ட​மிழந்து இருந்​தார். இது​வரை 12 இன்​னிங்​ஸ்​கள் விளை​யாடி உள்ள ஜேக் வெத​ரால்​டின் சராசரி 20.36 ஆக உள்​ளது.

30 வயதான மேட் ரென்ஷா 2016-ம் ஆண்டு ஆஸ்​திரேலிய அணி​யில் அறி​முக​மாகி இருந்​தார். இது​வரை 14 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி ஒரு சதம், 3 அரை சதம் அடித்​துள்​ளார். அவரது சராசரி 29.31 ஆக உள்​ளது. தொடரில் பின்​தங்​கி​யுள்ள ஆஸ்​திரேலிய அணி கடைசி டெஸ்ட் போட்​டி​யில் வெற்றி பெற வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது.

ஆஸ்​திரேலிய அணி விவரம்: பாட் கம்​மின்ஸ் (கேப்​டன்), டிரா​விஸ் ஹெட், மேட் ரென்​ஷா, ஸ்டீவ் ஸ்மித், மார்​னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்​லிஸ், மேகரூன் கிரீன், பியூ வெப்​ஸ்​டர், நேதன் லயன், ஸ்காட் போலன்ட், ஜோஷ் ஹேசில்​வுட்​, மிட்​செல்​ ஸ்டார்​க்.

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலிய அணியில் ஜேக் வெதரால்டு நீக்கம்
தேசிய மருத்​துவ ஆணை​யம் மூலம் மருத்​து​வர்​களுக்கு தனி அடை​யாள எண்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in