இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி
Updated on
1 min read

அகமதாபாத்: விஜய் ஹ​சாரே ஒரு​நாள் போட்​டித் தொடரில் ஜார்க்​கண்ட் - கர்​நாடகா அணி​கள் இடையி​லான போட்டி அகம​தா​பாத்​தில் நடை​பெற்​றது. இதில் முதலில் பேட் செய்த ஜார்க்​கண்ட் அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 412 ரன்​கள் குவித்​தது. கேப்​டன் இஷான் கிஷன் 39 பந்​துகளில், 14 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 125 ரன்​கள் விளாசி​னார். முன்​ன​தாக அவர், தனது சதத்தை 33 பந்​துகளில் விளாசி மிரட்​டி​னார்.

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட் போட்​டி​யில் குறைந்த பந்​துகளில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்​தார். இந்த வகை சாதனை​யில் பிஹார் அணி​யின் சகிபுல் கானி 32 பந்​துகளில் சதம் விளாசி முதலிடத்​தில் உள்​ளார். இஷான் கிஷனுக்கு உறு​துணை​யாக விளை​யாடிய விராட் சிங் 88, குமார் குஷாக்ரா 63 ரன்​கள் சேர்த்​தனர்.

413 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த கர்​நாடக அணி 47.3 ஓவர்​களில் 5 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. தேவ்​தத் படிக்​கல் 118 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 147 ரன்​கள் விளாசி​னார். அபினவ் மனோகர் 32 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 8 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும், கேப்​டன் மயங்க் அகர்​வால் 34 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 54 ரன்​களும் சேர்த்​தனர்​.

இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி
பிஹார் அணி 574 ரன்​கள் குவித்து சாதனை: டி வில்​லியர்​ஸின் சாதனையை தகர்த்​தார் வைபவ் சூர்​ய​வன்ஷி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in