பிஹார் அணி 574 ரன்​கள் குவித்து சாதனை: டி வில்​லியர்​ஸின் சாதனையை தகர்த்​தார் வைபவ் சூர்​ய​வன்ஷி

​விஜய் ஹசாரே ஒரு​நாள் கிரிக்​கெட் தொடர்
பிஹார் அணி 574 ரன்​கள் குவித்து சாதனை: டி வில்​லியர்​ஸின் சாதனையை தகர்த்​தார் வைபவ் சூர்​ய​வன்ஷி
Updated on
2 min read

ராஞ்சி: விஜய் ஹசாரே ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 574 ரன்​கள் குவித்து பிஹார் அணி உலக சாதனை படைத்​தது.

ராஞ்​சி​யில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பிஹார் அணி 50 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 574 ரன்​கள் குவித்து உலக சாதனை படைத்​தது. இதற்கு முன்​னர் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் கடந்த 2022-ம் ஆண்டு இதே அருணாச்​சல் பிரதேச அணிக்கு எதி​ராக தமிழ்​நாடு அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 506 ரன்​கள் குவித்​ததே சாதனை​யாக இருந்​தது.

இதை தற்​போது முறியடித்து புதிய சாதனையை படைத்​துள்​ளது பிஹார் அணி. பிஹார் அணி​யில் 14 வயதான தொடக்க வீர​ரான வைபவ் சூர்​ய​வன்ஷி 84 பந்​துகளில், 15 சிக்​ஸர்​கள், 16 பவுண்​டரி​களு​டன் 190 ரன்​கள் விளாசி​னார். அவர், தனது சதத்தை 36 பந்​துகளில் விளாசி​யிருந்​தார். மேலும் 150 ரன்​களை 59 பந்​துகளில் கடந்​தார்.

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் குறைந்த பந்​துகளில் 150 ரன்​களை விளாசி​யிருந்த தென் ஆப்​பிரிக்க அணி​யின் முன்​னாள் வீர​ரான ஏபி டிவில்​லியர்​ஸின் சாதனையை முறியடித்​தார் வைபவ் சூர்​ய​வன்​ஷி. டி வில்​லியர்ஸ் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக 64 பந்​துகளில் 150 ரன்​களை விளாசி​யிருந்​தார்.

அருணாச்சல பிரதேச அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் கேப்​டன் சகிபுல் கானி 32 பந்​துகளில், 12 சிக்​ஸர்​கள், 10 பவுண்டரி​களு​டன் 128 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார். அவர், தனது சதத்தை 32 பந்​துகளில் விளாசி அசத்​தி​னார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் குறைந்த பந்​துகளில் சதம் விளாசிய இந்​திய வீரர் என்ற சாதனையை சகிபுல் கானி படைத்​தார். இதற்கு முன்னர் இதே அருணாச்சல பிரதேச அணிக்கு எதி​ராக பஞ்​சாப் அணி​யின் அன்​மோல்​பிரீத் சிங் 35 பந்​துகளில் சதம் விளாசி​யதே சாதனை​யாக இருந்​தது. மேலும் சகிபுல் கானி​யின் சதம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் உலக அரங்​கில் 3-வது விரை​வான சதமாக​வும் அமைந்​தது.

இந்த வகை சாதனை​யில் தாஸ்​மேனியா அணிக்கு எதி​ராக ஜேக் பிரேசர் மெக்​கர்க் 29 பந்​துகளில் சதம் விளாசி முதலிடத்​தில் உள்​ளார். 2015-ம் ஆண்டு மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ராக டி வில்​லியர்ஸ் 31 பந்​துகளில் சதம் விளாசி 2-வது இடத்​தில் உள்​ளார்.

சகிபுல் கானிக்கு உறு​துணை​யாக விளை​யாடிய விக்​கெட் கீப்​பர் ஆயுஷ் லோஹருகா 56 பந்​துகளில், 8 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 116 ரன்​கள் விளாசி அசத்​தி​னார். இதன் விஜய் ஹசாரே தொடரில் ஒரு இன்​னிங்​ஸில் 3 சதங்​களை விளாசிய முதல் அணி என்ற சாதனையை​யும் பிஹார் அணி படைத்​தது.

அருணாச்சல பிரதேச அணி தரப்​பில் மிபோம் மோசு 9 ஓவர்​களை வீசி 116 ரன்​களை தாரை​வார்த்​தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட் போட்​டி​யில் அதிக ரன்​களை வழங்​கிய வீரர் என்ற மோச​மான சாதனையை படைத்​தார். இதற்கு முன்​னர் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் நெதர்​லாந்​தின் பாஸ் டி லீட் 115 ரன்​களை விட்​டுக்​கொடுத்​திருந்​தார்.

575 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த அருணாச்சல பிரதேச அணி 42.1 ஓவர்​களில் 177 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கம்ஷா யங்போ 32, டெக்கி நேரி 28, டெக்கி டோரியா 28 ரன்​கள் சேர்த்​தனர். பிஹார் அணி சார்​பில் ஆகாஷ் ராஜ், சுராஜ் காஷ்யப் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை​ வீழ்த்​தினர். 397 ரன்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ வெற்​றி பெற்​ற பிஹார்​ அணி 4 புள்​ளிகளை பெற்​றது.

பிஹார் அணி 574 ரன்​கள் குவித்து சாதனை: டி வில்​லியர்​ஸின் சாதனையை தகர்த்​தார் வைபவ் சூர்​ய​வன்ஷி
விரைவாக 16 ஆயிரம் ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in