ஈரான் ​போர் தாக்கம்: ஃபார்முலா-1 கார்ப் பந்தயம் ரத்து

ஈரான் ​போர் தாக்கம்: ஃபார்முலா-1 கார்ப் பந்தயம் ரத்து
Updated on
1 min read

துபாய்: ஈரான்​-அமெரிக்​கா, இஸ்​ரேல் இடையே போர் நடை​பெற்று வரு​வ​தால் பஹ்ரைன், சவுதி அரேபி​யா​வில் நடை​பெற​விருந்த ஃபார்​முலா-1 கார்ப்​ பந்​த​யம் ரத்து செய்யப்பட்​டுள்​ளது.

பிரபல கார்ப்​ பந்​தய​மான ஃபார்​முலா-1 கார்ப்​பந்​த​யம் ஒவ்​வொரு ஆண்​டும் நடத்​தப்​படு​கிறது. உலகம் முழு​வதும் பல்​வேறு நாடு​களில் 24 சுற்​றுகள் நடத்​தப்​படும். இந்த ஆண்​டுக்​கான முதல் சுற்று ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெற்​றது. தற்​போது சீனா​வில் நடந்து வரும் 2-வது சுற்​றின் இறு​திப் போட்டி நேற்று நடந்​தேறியது 3-வது சுற்று போட்டி வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஜப்​பானில் நடை​பெறவுள்​ளது.

4-வது சுற்று பஹ்ரைனில் ஏப்​ரல் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை​யும், 5-வது சுற்று சவுதி அரேபி​யா​வில் ஏப்​ரல் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை​யும் நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் மத்​திய கிழக்​கில் நிலவி வரும் போர் காரண​மாக பஹ்ரைன், சவுதி அரேபி​யா​வில் நடை​பெற இருந்த ஃபார்​முலா-1 கிராண்ட்​பிரீ சுற்​றுப் போட்​டிகள் ரத்து செய்​யப்​படு​வ​தாக ஃபார்​முலா-1 நிர்​வாகம் அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்து உள்​ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல்- ஈரான் இடையே​யான போரில் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதில் பஹ்ரைன், சவுதி அரேபியா மீது ஈரான் தொடர்ந்து ட்ரோன்​கள், ஏவு​கணை​களை வீசித் தாக்கி வரு​கிறது. இதையடுத்து பாது​காப்பு காரணங்​களுக்​காக பஹ்ரைன், சவுதி அரேபி​யா​வில் ஃபார்​முலா-1 ​கார்​பந்​த​யங்​கள்​ நடை​பெறாது என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஈரான் ​போர் தாக்கம்: ஃபார்முலா-1 கார்ப் பந்தயம் ரத்து
டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் தீவிர விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in