வெற்​றிப் பாதைக்கு திரும்​புமா டெல்லி? - பெங்களூரு அணியுடன் இன்று மோதல்

வெற்​றிப் பாதைக்கு திரும்​புமா டெல்லி? - பெங்களூரு அணியுடன் இன்று மோதல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு அணி​யுடன், டெல்லி கேப்​பிடல்ஸ் அணி மோதவுள்​ளது. பெங்​களூரு அணி 7 போட்​டிகளில் விளை​யாடி 5 வெற்​றி, 2 தோல்வி என 10 புள்​ளி​களுடன் பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது.

கடைசி​யாக குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் பெங்​களூரு அணி வீழ்த்​தி​யிருந்​தது. ஆனால் அதற்கு முந்​தைய ஆட்​டத்​தில் தனது சொந்த மைதான​மான பெங்​களூரு​வில் ஆர்​சிபி அணி, டெல்லி கேப்​பிடல்​ஸிடம் தோல்வி கண்​டிருந்​தது.

எனவே, அந்​தத் தோல்விக்கு பழி​வாங்​கும் வித​மாக இன்றைய ஆட்​டத்​தில் ஆர்​சிபி வீரர்​கள் செயல்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பெங்​களூரு அணியின் பேட்டிங்​கில் விராட் கோலி, தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்டிதார், ஜிதேஷ் சர்​மா, டிம் டேவிட், கிருணல் பாண்​டியா என அனை​வருமே அதிரடி​யாக ஆடக்​கூடிய​வர்​கள்.

அதே​போல், பந்​து​வீச்​சில் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்​வுட், ரசிக் சலாம் தர், கிருணல் பாண்​டி​யா, சுயாஷ் சர்மா ஆகியோர் பலம் சேர்க்ககூடியவர்களாக உள்ளனர். அக்‌சர் படேல் தலைமையிலான டெல்லி அணி 7 போட்டிகளில் விளை​யாடி 3 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​களைப் பெற்​றுள்​ளது. கடந்த 2 ஆட்​டங்​களி​லும் தோல்வி கண்​டுள்ள அணி, சொந்த மைதானத்​தில் நடை​பெறும் இன்றைய ஆட்​டத்​தில் பெங்​களூரு அணியை வீழ்த்​தும் நோக்​கத்​தில் களமிறங்​கு​கிறது.

பஞ்​சாப் அணி​யுட​னான கடந்த ஆட்​டத்​தில் டெல்லி வீரர் கே.எல்​.​ராகுல் அதிரடி​யாக விளை​யாடி 152 ரன்​களைக் குவித்​தார். ஐபிஎல் போட்​டிகளில் இந்​திய வீரர் ஒரு​வரின் அதி​கபட்ச ஸ்கோ​ராகும் இது. அதே​போல் அவருக்கு உறுதுணை​யாக நித்​திஷ் ராணா 44 பந்​துகளில் 91 ரன்களைச் சேர்த்​தார். இவர்களிட​மிருந்து மேலும் ஒரு உயர்​மட்ட செயல்​திறன் இந்த ஆட்​டத்​தில் வெளிப்படக்கூடும்.

அதே​போல் பதும் நிசங்​கா, டேவிட் மில்​லர், சமீர் ரிஸ்​வி, டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் தங்களது அதிரடியால் பலம் சேர்க்கக்கூடியவர்கள். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் ஒட்டு மொத்த பந்து வீச்சு துறையும் கடும்சிதைவுக்கு உட்பட்டிருந்தது. பெங்களூரு அணியிலும் பேட்டிங்கில் அதிரடி பட்டாளங்கள் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வியூகங்களை மாற்றி அமைக்கக்கூடும்.

வெற்​றிப் பாதைக்கு திரும்​புமா டெல்லி? - பெங்களூரு அணியுடன் இன்று மோதல்
Bulbbul: கொலையும் செய்வாள் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in