முஸ்டாபிஸுர் ரஹ்மானை நீக்கிய விவகாரம்: வங்கதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப தடை

முஸ்டாபிஸுர் ரஹ்மானை நீக்கிய விவகாரம்: வங்கதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப தடை
Updated on
1 min read

டாக்கா: வங்கதேச வீரர் முஸ்​டாபிஸுர் ரஹ்​மானை ஐபிஎல் அணியி​லிருந்து நீக்​கியதைத் தொடர்ந்​து, வங்​கதேசத்​தில் ஐபிஎல் கிரிக்​கெட் தொடரை ஒளிபரப்ப அந்​நாட்டு அரசு தடை விதித்​துள்​ளது.

வங்​கதேசத்​தில் இந்​துக்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​வ​தால் கொல்​கத்தா அணி​யில் இடம்​பெற்​றிருந்த முஸ்​டாபிஸுர் ரஹ்​மானை நீக்​கவேண்​டும் என்று பாஜக தலை​வர்​கள், சிவசே​னா, இந்து அமைப்​பினர் கோரிக்கை விடுத்​தனர். முஸ்​டாபிஸுரை கடந்த மாதம் நடை​பெற்ற ஐபிஎல் மினி ஏலத்​தில் ரூ.9.20 கோடிக்கு கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ்​(கேகேஆர்) அணி நிர்​வாகம் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில், இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரிய (பிசிசிஐ) உத்​தர​வின் பேரில் முஸ்​டாபிஸுரை கேகேஆர் அணி நிர்​வாகம் விடு​வித்​து​விட்​டது.

இதற்கு வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இதையடுத்​து, அடுத்த மாதம் இந்​தி​யா, இலங்​கை​யில் நடை​பெறவுள்ள ஐசிசி டி20 உலகக்​கோப்பை தொடரில் பங்​கேற்க இந்​தி​யா​வுக்கு வங்​கதேச அணி வராது என்​றும் தெரி​வித்​தது. மேலும், உலகக்​கோப்பை கிரிக்​கெட் தொடரில் வங்​கதேச அணி விளை​யாடும் போட்​டிகளை இலங்​கைக்கு மாற்றுமாறும் ஐசிசிக்கு அந்​நாட்டு கிரிக்​கெட் சங்​கம் கடிதம் எழு​தி​யுள்​ளது.

இந்த விவ​காரம் வலுத்து வரும் நிலை​யில், வங்​கதேசத்​தில் ஐபிஎல் கிரிக்​கெட் தொடரை ஒளிபரப்ப அந்​நாட்டு அரசு நேற்று தடை விதித்​துள்​ளது. மேலும், ஐபிஎல் கிரிக்​கெட் தொடர்​பான விளம்​பரங்​களை ஒளிபரப்​ப​வும் கால​வரையற்ற தடை விதித்து வங்​கதேச அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பான அதி​காரப்​பூர்வ உத்​தரவை அந்​நாட்டு அரசு பிறப்​பித்​துள்​ளது.

வங்​கதேச அரசு வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில் கூறி​யுள்​ள​தாவது: ஐபிஎல் கிரிக்​கெட் அணியி​லிருந்து வங்​கதேச வீரர் முஸ்​டாபிஸுரை நீக்​கியது சரியல்ல. அவரை நீக்​கு​மாறு இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ) உத்​தரவு பிறப்​பித்​திருப்​பது சரி​யான விஷயமல்ல.

பிசிசிஐ-​யின் இந்த முடிவுக்கு பின்​னால் எந்​த​வித​மான நியாய​மான காரண​மும் இருப்​ப​தாக தெரிய​வில்​லை. மேலும், இத்​தகைய முடிவு வங்​கதேச மக்​களைத் துயரத்​துக்​கும், அதிர்ச்​சிக்​கும், கோபத்​துக்​கும் உள்​ளாக்​கி​யுள்​ளது.

இந்​தச் சூழ்​நிலை​யில், மறு அறி​விப்பு வரும் வரை, இந்​தி​யன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்​டிகள் மற்​றும் நிகழ்ச்​சிகள் அனைத்​தை​யும் ஒளிபரப்பு செய்​வதை நிறுத்​தும்​படி அறி​வுறுத்​தல்​களின்​படி கோரிக்கை விடுக்​கப்​படு​கிறது. இந்த உத்​தரவு உரிய அதி​காரி​யின் ஒப்​புதலுடன், பொது நலன் கரு​தி​யும் வெளி​யிடப்​படு​கிறது. ஐபிஎல் போட்​டிகள், அதுதொடர்​பான விளம்​பரங்​கள், ஐபிஎல் கேம்​ஸ், பிரபலப்​படுத்​தும் நிகழ்ச்​சிகள் என அனைத்​துக்​கும் தடை விதிக்​கப்​படுகிறது. இவ்​வாறு அந்த உத்​தரவில் கூறப்​பட்​டுள்​ளது.

முஸ்டாபிஸுர் ரஹ்மானை நீக்கிய விவகாரம்: வங்கதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப தடை
சாகர் தீவை இணைக்க பாலம்: முதல்வர் மம்தா அடிக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in