சாகர் தீவை இணைக்க பாலம்: முதல்வர் மம்தா அடிக்கல்

சாகர் தீவை இணைக்க பாலம்: முதல்வர் மம்தா அடிக்கல்
Updated on
1 min read

சாகர் தீவு: மேற்கு வங்க மாநிலத்தில் ஆண்டுதோறும் கங்காசாகர் மேளா சாகர் தீவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இந்த தீவுக்கு வந்து சங்கமத்தில் நீராடி கபில் முனி கோவிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

சாகர் தீவிற்கு படகுகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும் என்பதால் ஆண்டுதோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், யாத்ரீகர்களின் வசதியை கருத்தில் கொண்டு சாகர் தீவை இணைக்கும் வகையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.1,670 கோடி செலவில் பாலம் அமைக்கப்பட உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இதற்கான அடிக்கல் நாட்டினார்.

சாகர் தீவை இணைக்க பாலம்: முதல்வர் மம்தா அடிக்கல்
இந்தூர் குடிநீர் மாசுபாடு: மேலும் 20 பேருக்கு தொற்று

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in