ஐபிஎல் வீரர்கள் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது

ஐபிஎல் வீரர்கள் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது
Updated on
1 min read

புதுடெல்லி: ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த 3 ஆண்டுகளாக துபாய், ஜெட்டா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கூறும்போது, “ஐபிஎல் வீரர்கள் ஏலத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடத்த நாங்கள் முயற்சிக்கிறோம், ஆனால் அதிக திருமண சீசன் காரணமாக எங்களுக்கு ஏலம் நடத்துவதற்கான அரங்கம் கிடைக்கவில்லை.

அடுத்த சீசனுக்கான ஏலம் சிறியதாகவே இருக்கும் என்பதால் இந்தியாவிலேயே நடைபெற வேண்டும் என விரும்புகிறோம். அதற்கு தகுந்தவாறு எங்களுக்கு அரங்கம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

ஐபிஎல் வீரர்கள் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது
கடைசி டி20-ல் இன்று மோதல்: களமிறங்குகிறார் சூர்யவன்ஷி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in