பலம் மிகுந்த ராஜஸ்​தானை வீழ்த்துமா டெல்லி? - ஜெய்ப்பூரில் இன்று பலப்பரீட்சை

பலம் மிகுந்த ராஜஸ்​தானை வீழ்த்துமா டெல்லி? - ஜெய்ப்பூரில் இன்று பலப்பரீட்சை
Updated on
1 min read

ஜெய்ப்​பூர்: ஐபிஎல் தொடரில் இன்று பலம்​மிகுந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​யை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்த்து விளையாட​வுள்​ளது. இந்த ஆட்​டம் ஜெய்ப்​பூர் சவாய்​மான்​சிங் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது.

ராஜஸ்​தான் அணி இது​வரை 9 போட்​டிகளில் விளை​யாடி 6 வெற்றி, 3 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக நடை​பெற்ற பஞ்​சாப் கிங்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் பலம்​வாய்ந்த அந்த அணியை வீழ்த்திய உற்​சாகத்​தில் ராஜஸ்​தான் களமிறங்​கு​கிறது. முதலில் விளை​யாடிய பஞ்​சாப் அணி 222 ரன்​கள் குவித்​த​போ​தி​லும், ராஜஸ்​தான் அணி, அந்த இலக்கை வெற்​றிகர​மாக துரத்தி சாதனை படைத்​தது.

ராஜஸ்​தான் வீரர்​கள் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், டோனவன் பெரை​ரா, ஷுபம் துபே ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி வெற்​றியை வசப்​படுத்​தினர். தொடக்க ஆட்​டக்​காரர்​களாக களமிறங்​கும் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், வைபவ் சூர்​ய​வன்ஷி ஆகியோர் சீரான அதிரடி ஆட்​டத்தை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர். எனவே, டெல்லி அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் இவர்​களிட​மிருந்து மேலும் ஓர் அபார​மான இன்னிங்ஸ் வெளிப்​படக்​கூடும்.

அதே​போல் பந்​து​வீச்​சில் ஜோப்ரா ஆர்ச்​சர், நந்த்ரே பர்​கர், பிரிஜேஷ் சர்​மா, யஷ் ராஜ் புஞ்சா ஆகியோர் சிறப்​பாக பந்​து​வீசி வரு​கின்​றனர். டெல்லி அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு ஜோப்ரா ஆர்ச்​சர் தலை​மையி​லான பந்​து​வீச்​சுக் குழு நிச்​ச​யம் அழுத்​தம் கொடுக்​கும் என்று நம்​பலாம். அதே​நேரத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி, இது​வரை 8 போட்​டிகளில் விளை​யாடி 3 வெற்​றி, 5 தோல்விகளு​டன் 6 புள்​ளி​களை மட்​டுமே பெற்​றுள்​ளது.

கடைசி​யாக நடை​பெற்ற ஹைத​ரா​பாத், பஞ்​சாப், பெங்​களூரு அணிக்​கெ​தி​ரான போட்​டிகளில் அந்த அணி வரிசை​யாக தோல்வி கண்​டுள்​ளது. எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் சிறப்​பாக விளை​யாடி வெற்​றிப் பாதைக்கு திரும்ப டெல்லி வீரர்​கள் தங்​களது உயர்​மட்ட திறனை வெளிப்​படுத்த வேண்​டும் என ரசிகர்கள் எதிர்​பார்க்​கின்​றனர்.

பெங்​களூரு அணிக்​கெ​தி​ரான கடந்த ஆட்​டத்​தில் டெல்லி அணி 75 ரன்​களுக்​குச் சுருண்​டது. எனவே, அந்த மோச​மான அனுபவத்திலிருந்து வெளியே வரு​வதற்கு டெல்லி வீரர்​கள் முயற்சி செய்​யக்​கூடும். டேவிட் மில்​லர், கே.எல்​.​ராகுல், நித்​திஷ் ராணா, சமீர் ரிஸ்​வி, டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், அக்​சர் படேல், அபிஷேக் போரல் போன்ற வீரர்​கள் சிறப்​பாக விளை​யாடும்​போது அது நிச்சயம் எதிரணிக்கு அழுத்​தத்​தைத் தரும்.

அதே​போல் பந்​து​வீச்​சில் கைல் ஜேமிசன், துஷ்மந்தா சமீ​ரா, அக்சர் படேல், டி.நடராஜன் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் தரும் வகையில் பந்​து​வீச வேண்டுமென ரசிகர்கள் எதிர்ப் பார்க்கின்றனர்.

பலம் மிகுந்த ராஜஸ்​தானை வீழ்த்துமா டெல்லி? - ஜெய்ப்பூரில் இன்று பலப்பரீட்சை
வைகை ஆற்றில் கள்ளழகர் - மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலம் | புகைப்படத் தொகுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in