சுனில் நரைன், வருண் சுழலை சமாளிக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்? - இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதல்

சுனில் நரைன், வருண் சுழலை சமாளிக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்? - இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதல்
Updated on
3 min read

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 6 தோல்வி​களு​டன் 8 புள்ளிகள் பெற்று பட்​டியலில் 7-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை பெற வேண்​டு​மா​னால் இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 4 ஆட்டங்களி​லும் வெற்றி பெற வேண்​டும் என்ற நெருக்​கடி​யில் உள்ளது.

அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட்​ரைடர்ஸ் அணி 9 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம், 5 தோல்வி​கள் என 7 புள்​ளி​கள் பெற்று பட்டியலில் 8-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி இன்​றைய ஆட்டம் உட்ட எஞ்​சி​யுள்ள அனைத்து ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றால் அதி​கபட்​ச​மாக 17 புள்​ளி​களை எட்​டலாம்.

இது நிகழ்ந்​தா​லும் மற்ற அணி​களின் வெற்​றி, தோல்வி​கள் மற்றும் நிகர ரன் ரேட் ஆகிய​வற்றை பொறுத்தே கொல்​கத்தா அணி​யின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு தெரிய​வரும். இதனால் இன்றைய ஆட்​டம் இரு அணி​களுக்​குமே முக்​கி​யத்​து​வம் வாயந்ததாக மாறி உள்​ளது. இன்​றைய ஆட்​டத்​தில் தோல்​வியை சந்​திக்​கும் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை பெறு​வ​தில் சிக்​கல்​களை சந்​திக்க நேரிடும்.

நடப்பு சீசனில் சவாலான ஆடு​களங்​களில் பேட்​டிங் செய்ய முடியாமலும், பேட்​டிங்​கிற்கு சாதக​மான ஆடு​களங்​களில் எதிரணி​யின் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்த முடி​யாமலும் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி திணறி வரு​கிறது. இது ஒரு​புறம் இருக்க அருண் ஜேட்லி மைதானம் அந்த அணிக்கு கைகொடுக்​குமா என்பது சந்​தேகமே. ஏனெனில் நடப்பு தொடரில் டெல்லி அணிக்கு இந்த மைதானம் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வரு​கிறது.

இது ஒரு​புறம் இருக்க கொல்​கத்தா அணி​யில் சுனில் நரைன், வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் தங்​களது சுழலால் மேஜிக் நிகழ்த்​தக்​கூடிய​வர்​கள் என்​ப​தால் இன்​றைய போட்​டிக்​கான ஆடுகளத்தை பேட்​டிங்​கிற்கு சாதக​மான வகை​யில் டெல்லி அணி தேர்வு செய்​யக்​கூடும். அந்த வகை​யில் 6-வது ஆடு​களம் பயன்​படுத்​தக்​கூடும். இந்த ஆடு​களத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 264 ரன்​கள் குவித்த போதி​லும் வெற்றி பெற முடி​யாமல் போனது.

இந்த முடி​விற்​குப் பின்​னால் இருக்​கும் உண்​மை​யான காரணம், டெல்லி அணி​யின் பேட்​டிங் வரிசை மீது நிர்​வாகத்​துக்கு இருக்​கும் நம்​பிக்​கை​யின்மைதான். இதற்கு சான்​றாக, ஆர்​சிபி அணிக்கு எதி​ரான ஆட்​டம் அமைந்​தது. சமீபத்​தில் ஆர்​சிபி அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் டெல்லி அணி 9 ரன்​களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்​தது.

இந்த மோச​மான செயல் திறன், ஆடு​களம் பந்​து​வீச்சாளர்களுக்குச் சாதக​மாக இருந்​தால் தங்​களது பேட்​டர்​களால் அதைச் சமாளிக்க முடி​யாது என்ற அச்​சம் டெல்லி அணி நிர்வாகத்​துக்கு ஏற்​பட்டுள்ளதாக கூறப்​படு​கிறது. இதன் காரணமாகவே பந்​து​வீச்​சாளர்​களுக்​குச் சவாலாக இருந்​தா​லும், பேட்​டர்​களுக்கு வசதி​யான ஆடு​களத்தை அவர்​கள் நாடுகின்றனர்.

ஏனெனில் பந்து நன்கு பிடி​மானம் கிடைக்​கக்​கூடிய வேகம் குறைந்த ஆடு​களங்​களில், டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யின் பேட்டர்​கள் தடு​மாறு​வது ஏற்​கெனவே நிரூபண​மாகி​யுள்​ளது. குஜராத் டைட்​டன்ஸ் அணி​யின் ரஷித் கான், சிஎஸ்கே அணி​யின் அகீல் ஹொசைன், நூர் அகமது ஆகியோரின் பந்​து​வீச்சை எதிர்கொள்ள முடி​யாமல் திணறி​யிருந்​தனர்.இந்த வகை​யில் இன்றைய ஆட்​டத்​தில் சுனில் நரைன், வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் டெல்லி அணி​யின்

கே.எல்​.​ராகுல், பதும் நிசங்​கா, சமீர் ரிஸ்​வி, டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், கருண் நாயர் ஆகியோரை உள்​ளடக்​கிய டெல்லி அணி​யின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்​கக்​கூடும். அதேவேளை​யில் டெல்லி அணி​யின் முதன்மை சுழற்​பந்து வீச்​சாள​ரான குல்தீப் யாதவ் பார்​மின்றி தவித்து வரு​கிறார். நடப்பு சீசனில் 10 ஆட்டங்களில் 7 விக்​கெட்​களை மட்​டுமே கைப்​பற்​றி​யுள்ள அவர், ஓவருக்கு சராசரி​யாக 10.36 ரன்​களை வாரி வழங்கி உள்​ளார். இப்படியொரு இக்​கட்​டான சூழ்​நிலை​யில், தெளி​வான மாற்​றுத் திட்​டம் ஏது​மற்ற, சராசரி அணி​யாகத் தென்​படும் டெல்லி கேப்​பிடல்​ஸுக்கு இருக்​கும் ஒரே வழி பேட்​டிங்​கிற்கு தட்​டை​யான ஆடுகளத்​தில் விளையாடு​வது மட்​டுமே.

இது போன்ற தட்​டை​யான ஆடு​களம் இது​வரை சிறப்​பாகச் செயல்ப​டாத டெல்லி அணி​யின் பேட்​டர்​களுக்கு பெரிய ஸ்கோரை எட்​டும் வாய்ப்பை வழங்​கும். முதலில் அதிக ரன்களைக் குவித்​து​விட்​டு, பின்​னர் பந்​து​வீச்​சாளர்​கள் மூலம் அந்த இலக்​கைத் தக்​கவைக்க அணி நிர்​வாகம் திட்டமிட்டக்கூடும். நட்​சத்​திர வேகப்​பந்து வீச்​சாளர் மிட்​செல் ஸ்டார்க், லுங்கி நிகிடி ஆகியோர் பந்​து​வீச்​சில் எதிரணி​யைக் கட்டுப்​படுத்தி வெற்​றியை உறுதி செய்​வார்​கள் என்று டெல்லி அணி மலை​போல நம்​பி​யுள்​ளது.

டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு இருக்​கும் ஒரே சாதக​மான அம்​சம் என்​னவென்​றால், கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் பலவீனமான முன்​வரிசை பேட்​டிங்தான். கொல்​கத்தா அணி​யின் முன்​வரிசை பேட்​டிங்​கில் முக்​கி​யத் தூண்​களாகக் கருதப்​படும் கேப்​டன் அஜிங்க்ய ரஹானே (205 ரன்​கள், ஸ்டிரைக் ரேட் 131.42), அங்க்​ரிஷ் ரகு​வன்ஷி (268 ரன்​கள், ஸ்டிரைக் ரேட் 137.43) ஆகிய இரு​வரும் பெரும்​பாலான போட்​டிகளில் ஆட்​டத்​தின் போக்கை மாற்​றும் அளவுக்கு அதிரடி காட்டவில்​லை.

இதைப் பயன்​படுத்​தி, மிட்​செல் ஸ்டார்க், லுங்கி நிகிடி வேகக்​கூட்டணி ஆரம்​பத்​திலேயே விக்​கெட்​டு​களை வீழ்த்தி​னால், கொல்​கத்தா அணியை எளி​தில் நெருக்​கடிக்​குள்​ளாக்க முடி​யும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்ற வெற்​றிகளில் ரிங்கு சிங்​கின் (245 ரன்​கள், 145.39 ஸ்டிரைக் ரேட்) அபார​மான ஆட்​டம் முக்கியமான காரண​மாக இருந்​தது. இக்​கட்​டான நேரங்​களில் அணி​யைத் தாங்​கிப் பிடிக்​கும் பொறுப்பை ரிங்கு சிங் மட்​டுமே வெற்​றிகர​மாகச் செய்து வரு​கிறார்.

அவரைத் தவிர மற்ற பேட்​டர்​கள் பெரும்​பாலும் ரன் குவிக்க முடியாமல் திணறி வரு​கின்​றனர். கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்​னும் பிளே-ஆஃப் வாய்ப்​பில் நீடிக்​கிறது என்​றால், அதற்கு மிக முக்​கிய​மான காரணம் சுனில் நரைன், மற்​றும் வருண் சக்​ர​வர்த்திதான். சுனில் நரைன் 9 விக்​கெட்​டு​களை​யும், வருண் சக்​ர​வர்த்தி 10 விக்​கெட்​டு​களை​யும் வீழ்த்தி அணி​யின் வெற்​றிக்​குத் தூணாக நின்​றுள்​ளனர்.

டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யைப் பொறுத்​தவரை பேட்​டிங், பந்​து​வீச்​சில் பிரச்​சினை​கள் அடுக்​கடுக்​காக நீண்​டு​கொண்டே போகின்​றன. அந்த அணியின் தொடக்க வீர​ரான கே.எல்.​ராகுல் தனது தனிப்பட்ட ஆட்​டத்​திறனில் பெரிய மாற்​றத்​தைக் கொண்டு வந்​துள்​ளார். இந்த சீசனில் இது​வரை 445 ரன்​கள் குவித்​துள்ள அவர், தனது ஐபிஎல் வரலாற்​றிலேயே மிகச்​சிறந்த ஸ்டிரைக் ரேட்டான 180-க்​கும் மேல் (180.89) வைத்​துள்​ளார்.

ஆனாலும், டி20 கிரிக்​கெட்​டின் தற்​போதைய பரிணாம வளர்ச்சி அவரது இந்த அதிரடியை​யும் ஒரு ‘சராசரி’ ஆட்​ட​மாகவே காட்டுகிறது. ஏனெனில் அபிஷேக் சர்​மா, வைபவ் சூர்​ய​வன்ஷி ஆகியோரது ஸ்டிரைக் ரேட் 200-க்​கும் அதி​க​மாக உள்​ளது. மற்​றொரு தொடக்க வீர​ரான பதும் நிசங்கா 9 போட்​டிகளில் விளையாடி வெறும் 228 ரன்​கள் மட்​டுமே எடுத்​துள்​ளார். அவரை தொடர்ந்து அணி​யில் நீடிக்க வைக்​கும் நிர்​வாகத்​தின் முடிவு புரியாத ஒன்​றாகவே உள்​ளது.

வலைப்​ப​யிற்​சி​யில்கூட பந்​துகளைச் சரி​யாக எதிர்​கொள்ள முடியாமல் திணறி வரும் கருண் நாயரை ஆடும் லெவனில் சேர்ப்பதும் எந்​த​வித லாஜிக்​கும் இல்​லாத முடி​வாகப் பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த வீர​ராக இருந்​தா​லும், நிதிஷ் ராணா இன்​னும் ‘ஷார்ட் பால்’ பலவீனத்​திலிருந்து மீளவில்லை. வேகப்​பந்து வீச்​சில் முகேஷ் குமார், டி.நட​ராஜன், ஆகிப் நபி தார் ஆகி​யோர் ஓவருக்கு முறையே 11, 11.18 மற்​றும் 13.42 ரன்​களை தாரை வார்த்​துள்​ளனர்.

நடப்பு சீசனில் அந்த அணி​யில் எந்த பந்​து​வீச்​சாள​ரும் இரட்டை இலக்க விக்​கெட்டை கைப்​பற்​ற​வில்​லை. அதி​கபட்​சமாக அக்​சர் படேல் 9 விக்​கெட்​களை கைப்​பற்றி உள்​ளார். இன்​றைய ஆட்டத்தில்​ டெல்​லி அணி வெற்​றி பெற வேண்​டு​மா​னால்​ புதி​ய யுத்​தி​களு​டன்​ அனைத்​து துறை​யிலும்​ மேம்​பட்​ட செயல்​ திறனை வெளிப்​படுத்​த வேண்டியது அவசியம்.

சுனில் நரைன், வருண் சுழலை சமாளிக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்? - இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதல்
புதுச்சேரி ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்த பழனிசாமி - நடந்தது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in