ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் த்ரில் வெற்றி | ஐபிஎல் 2026

ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் த்ரில் வெற்றி | ஐபிஎல் 2026
Updated on
1 min read

புதுடெல்லி: ஐபிஎல் 2026 தொடரின் 62-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. 

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். நடுவரிசையில் ரியான் பராக் 51 ரன்களும், துருவ் ஜூரல் 53 ரன்களும்  எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர். டெல்லி தரப்பில் அதிரடியாகப் பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ராஜஸ்தானின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். லுங்கி என்கிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு, தொடக்க வீரர்களான அபிஷேக் போரெல் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அபிஷேக் போரெல் 51 ரன்களும், பொறுப்புடன் ஆடிய கே.எல். ராகுல் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நடுவரிசையில் விக்கெட்டுகள் சரிந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இருப்பினும், இறுதி ஓவர்களில் அக்சர் படேல் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். கடைசி ஓவரில் அசுதோஷ் சர்மா 5 பந்துகளில் 18 ரன்கள் விளாசி, 4 பந்துகள் மீதமிருக்கையிலேயே டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பிரிஜேஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் த்ரில் வெற்றி | ஐபிஎல் 2026
‘கருப்பு’ வெற்றி: சூர்யா நெகிழ்ச்சிப் பகிர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in